மாணவர்களே அலர்ட்!! நாளை தரவரிசைப்பட்டியல் வெளியீடு..பிடித்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி..?
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திடத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. அன்றிலிருந்தே கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பதிவு கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதில் அரசு கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சம் இடங்களுக்கு சுமார் 4.07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் 2.94 லட்சம் பேர் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.இந்தாண்டு முதல்முறையாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் பொறியியல் படிப்புகளில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்றது. இதுவரை சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:மாணவர்களே கவனத்திற்கு.. கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. எப்போது வரை..?
இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.ஏ தமிழ் இலக்கியம்/ பி.லிட் போன்ற படிப்புகளுக்கான தமிழ் தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும்
அதேபோன்று, பி.ஏ. ஆங்கில இலக்கிய சேர்க்கைக்கான ஆங்கில தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் ஆங்கில பாடநெறியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும். B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A. / B.S.W போன்ற இதர அனைத்து பாடங்களுக்கான பொது தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் தவிர மீதமுள்ள நான்கு பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மக்களே அலர்ட்.. மாதந்தோறும் 1.30 லட்சம் வரை சம்பளத்தில் அரசுப் பணி.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..
தரவரிசைப் பட்டியல் வெளியானவுடன் மாணவர்கள் தேர்வு செய்த விருப்ப கல்லூரிகள் மற்றும் பாடநெறிகள் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு அந்தந்த கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில், அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தங்களது சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.