Asianet News TamilAsianet News Tamil

மக்களே அலர்ட்.. மாதந்தோறும் 1.30 லட்சம் வரை சம்பளத்தில் அரசுப் பணி.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..

சமூக அலுவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப் பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 
 

TNPSC Notification 2022 - Total 16 vacancies for vocational counsellor and community officer
Author
Tamil Nadu, First Published Jul 30, 2022, 11:49 AM IST

சமூக அலுவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப் பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த 28 ஆம் தேதி இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திற்க வேண்டும். மேலும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி  சமூவ அலுவலர் பதவிகளுக்கான தேர்வும் அதே போல் 13 ஆம் தேதி தொழில் ஆலோசகர் பதவிகளுக்கான தேர்வு நடக்கவிருக்கிறது. இரு தேர்வுகளும் கணினி வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு ..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு

16 காலி பணியிடங்களுக்கு தற்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆலோசர் பதவியில் 5 பணியிடங்களும் சமூக ஆலோசகர் பதவியில் 11 பணொயிடங்களும் காலியாக உள்ளன. சம்பளத்தை பொறுத்தவரை தொழில் ஆலோசர் பணிக்கு மாதந்தோறும் ரூ.36,200 முதல் ரூ. 1,33,100 வரை வழங்கப்படும். அதே போல், சமூக அலுவலர் பணிக்கு மாதந்தோறும் ரூ.35,600 முதல் ரூ.1,30,800 வரை வழங்கப்படும். 

தொழில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுவும் மருத்துவம் மற்றும் சமூக உளவியல் ஆகியவற்றை சிறப்பு பாடங்களாக படித்திருக்க வேண்டும். 
சமூக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், அரசு மற்றும் அரசு சாராத துறைகளில் குறைந்தது இரண்டாண்டுகள் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க:பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்

இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதினை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி வழி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகியவற்றின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:தரவரிசைப்பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.. முதல் 5 இடத்தை பிடித்த கல்லூரிகள் எவையெவை..?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அது போல், நிரந்தர பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios