தரவரிசைப்பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.. முதல் 5 இடத்தை பிடித்த கல்லூரிகள் எவையெவை..?

அண்ணா பல்கலைக்கழகம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில், கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. 

Anna University released ranking list for engineering colleges

அண்ணா பல்கலைக்கழகம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில், கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம், இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது. 

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அதில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு கடந்த மே மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டன. ஜுன் 20 ஆம் தேதி இதன் முடிவுகள் வெளியாகின. 

மேலும் படிக்க:பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்

அன்றில் இருந்தே பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு 1.51 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. குரோம்பேட்டை எம்ஐடி வளாகக் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 

கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தனியார் கல்லூரி மூன்றாவது இடமும் , செங்கல்பட்டு சிவசுப்பிரமணிய நாடார் தனியார் கல்லூரியும் 4 வது இடமும் பிடித்துள்ளது. அதேபோல, 5 ஆவது இடத்தை கோயம்புத்தூர் சிஐடி கல்லூரி பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள KKC தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்..!

அதேபோல 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios