Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களே கவனத்திற்கு.. கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. எப்போது வரை..?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ்‌ உள்ள 130 கலை, அறிவியல்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்‌ கால அவகாசத்தை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம்‌ உத்தரவிட்டுள்ளது.
 

Madras University has extended the deadline for applying in arts and science colleges
Author
Tamil Nadu, First Published Jul 30, 2022, 1:02 PM IST

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்று அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு தொடங்கியது. அரசு கலை கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சம் இடங்களுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதில்‌ 2.94 லட்சம்‌ பேர்‌ வரை விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்தியுள்ளனர்‌. தற்போது இணையவழியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் இந்தாண்டு முதல்முறையாக கலை, அறிவியல்‌ சேர்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக்‌ கடந்துள்ளது. இதேபோன்று, அண்ணா பல்கலைக்‌ கழகத்தின்கீழ்‌ இயங்கும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ இளநிலைப் பொறியியல் படிப்புகளில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமார்‌ 3 லட்சம்‌ பேர்‌ விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதற்கிடையே பொறியியல்‌, கலை, அறிவியல்‌ சேர்க்கை விண்ணப்பப்‌ பதிவுக்கான கால அவகாசம்‌ கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில்‌, சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ்‌ உள்ள 130 கலை, அறிவியல்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்‌ கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம்‌ உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” நடப்பு கல்வி ஆண்டில்‌ சென்னைப்‌ பல்கலைக்கழக கட்டுப்பாட்டில்‌ உள்ள கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ சேருவதற்கான கால அவகாசம்‌ ஆகஸ்ட்‌ 16 ஆம்‌ தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 130 இணைப்புக்‌ கல்லூரிகளில்‌ பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்‌., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளில்‌ சேருவதற்கும்‌ ஆகஸ்ட்‌ 16ஆம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்‌ என்று தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:தரவரிசைப்பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.. முதல் 5 இடத்தை பிடித்த கல்லூரிகள் எவையெவை..?

Follow Us:
Download App:
  • android
  • ios