- Home
- Tamil Nadu News
- உயிருக்கு ஆபத்து.. அம்மாவின் சொத்துக்கள் என் பெயரில் தான் இருக்கு! பூங்குன்றனால் அதிமுகவில் பரபரப்பு!
உயிருக்கு ஆபத்து.. அம்மாவின் சொத்துக்கள் என் பெயரில் தான் இருக்கு! பூங்குன்றனால் அதிமுகவில் பரபரப்பு!
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், தன் மீதான விசுவாச விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அம்மாவின் சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தும் கட்சி நலனுக்காக ஒதுங்கி நின்றதாகவும் அவரது மரணம் குறித்து மருத்துவமனையிடம் கேள்வி.

அம்மாவின் மரணம் குறித்து என்னைக் கேள்வி கேட்பவர்கள், என்றைக்காவது அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டதுண்டா? என ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில்: அரசியல் என்பது பலருக்கு அதிகாரம். ஆனால் எனக்கு அது ஒரு ஆன்மீகப் பயணம். புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு 19 ஆண்டு காலம் நிழலாகப் பணியாற்றிய ஒருவனின் இதயத்திலிருந்து எழும் வரிகள் இவை. வெறும் உதவியாளனாக அல்ல, ஒரு தாயின் நம்பிக்கைக்குரிய மகனாக, அந்தப் பேரியக்கத்தின் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவன் நான். எனது விசுவாசம் இன்று நேற்று முளைத்தது அல்ல; அது என் தந்தையிடமிருந்து எனக்குக் கடத்தப்பட்ட ரத்த மரபு. 2001 சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அந்த உயரிய இடத்தில் என் தந்தையைத் தனக்கு இணையாக அமர வைத்து அழகு பார்த்தார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
அன்று என் தந்தை அடையாளம் காட்டிய வேட்பாளர்கள் இன்றும் களத்தில் நிற்கிறார்கள் என்றால், அதுவே என் தந்தையின் தீர்க்கதரிசனத்திற்கும், அம்மா அவர் மீது வைத்திருந்த விசுவாசத்திற்கும் சாட்சி. ஒரு சிறு தவறு செய்தாலும் தயவுதாட்சண்யமின்றித் தூக்கி எறியும் குணம் கொண்ட புரட்சித்தலைவி, இத்தனை காலம் என்னை அரவணைத்து வைத்திருந்தார் என்றால், அதற்கு ஒரே காரணம், என் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த இரும்பு பெண்மணியிடம் இத்தனை ஆண்டு காலம் யாராலும் பணியாற்ற முடியுமா? என்று அம்மாவை தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். பிறகு குறை கூறுங்கள். சிலர் என்னை துரோகி என்று விமர்சிக்கிறார்கள்.
இன்று விமர்சிப்பவர்கள் ஒன்றை உணர வேண்டும். அம்மாவின் சொத்துக்களை என் பெயரில் எழுதும் அளவிற்கு அம்மா என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். உங்கள் யாராவது ஒருவரின் பெயரில் அப்படி எழுதப்பட்டதா? அந்த கட்சி சொத்துக்களின் வாரிசு நான் தான் என்று உரிமை கோரி நின்றிருந்தால், கட்சிக்கு நான் தான் வாரிசு என்று உரக்கச் சொல்லியிருந்தால் யாரால் அதைத் தடுத்திருக்க முடியும்? அதை யாராலும் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆனால், நான் எதற்கும் ஆசைப்படவில்லை. உரிமை கோரவில்லை. ஒதுங்கி நின்றேன். காரணம், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் அந்தப் பேரியக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம்.
சொத்துக்கள் என் பெயரில் இருப்பதால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் இயக்கத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் என் மீது ஆசை இல்லை சொத்துக்கள் மீது தான் ஆசை இருக்கும் என்பது உங்களுக்கும் புரியும். கட்சியில் பிளவுகள் ஏற்பட்ட போதும் எந்த தலைவரும் உணர்ச்சி வசப்பட்டு இந்த விஷயத்தை சொல்லவில்லையே அது ஏன்? என்னை குறை சொல்ல நினைப்பவர்கள் நீங்கள் பின்தொடரும் தலைவரிடம் என்னை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு குறை சொல்லுங்கள். ஒருபோதும் தலைவர்களை நான் குறை சொல்லவில்லை, இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சில கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் விரும்பும் தலைவர்களை குறை சொல்லாததால் தான் என்னை விசுவாசமற்றவனாக நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். மாற்றுக்கட்சிகளில் இருந்து எத்தனையோ அழைப்புகள் வந்தன. கவலை என்னை துரத்திய போதும், "தாயின் ஆன்மா என்னைத் தவறாக நினைத்துவிடுமே" என்று கலங்கி நின்றேனே தவிர, ஒருபோதும் தடம் மாறவில்லை. இதையும் மீறி என்னை விசுவாசம் அற்றவன் என்று சொல்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், "நிழலின் அருமை வெயிலில் தெரியும், என் அருமை காலம் சொல்லும்!" அம்மாவின் மரணம் குறித்து என்னைக் கேள்வி கேட்பவர்கள், என்றைக்காவது அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டதுண்டா? பெற்ற தாயாக இருந்தால் இப்படித்தான் மௌனமாக இருந்திருப்பீர்களா? எதுவும் செய்யாமல் விமர்சனம் மட்டும் செய்பவர்கள் முன் என் விசுவாசம் என்றும் தலைகுனியாது.