MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • திருச்செந்தூர் முருகன் கோயில் அதிர்ச்சி!.. கடலில் இருந்து அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?

திருச்செந்தூர் முருகன் கோயில் அதிர்ச்சி!.. கடலில் இருந்து அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?

Tiruchendur Murugan Temple: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 02 2026, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

தமிழ் கடவுளாகவும், அழகின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

25
Image Credit : stockPhoto

இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து முருகன் அருளை பெறுகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

Related Articles

Related image1
May Month Rajyogam: அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுது! மே மாத கிரகப் பெயர்ச்சிகளால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!
Related image2
தவெகவுக்கு 41% வாக்குகள்.. முதல்வராகிறார் விஜய்? புதிய சர்வே முடிவு.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்!
35
Image Credit : Asianet News

இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்திய, பிந்திய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும். சில நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கடற்கரையை தாண்டி வெளியே அலையடிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

45
Image Credit : Asianet News

இந்நிலையில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 70 அடி தூரம் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே தென்பட்டன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர். சில பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

55
Image Credit : Asianet News

மேலும் கடல் உள்வாங்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அறிவுறுத்தியுள்ளனர். கடலில் நீராடும் பக்தர்கள் கவனமான முறையில் நீராடுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மூலமும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோவில்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சுனாபா யோகத்தால் கோடிகளை குவிக்க போகும் 3 ராசிகள்.! பணமும் பதவியும் இனி உங்களை தேடி வருமாம்.! சேர்த்து வச்சிக்கோங்க.!
Recommended image2
May Month Rajyogam: அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுது! மே மாத கிரகப் பெயர்ச்சிகளால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!
Recommended image3
Today Rasi Palan : மே 02 - இன்று அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் பட்டியல்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!
Related Stories
Recommended image1
May Month Rajyogam: அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுது! மே மாத கிரகப் பெயர்ச்சிகளால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!
Recommended image2
தவெகவுக்கு 41% வாக்குகள்.. முதல்வராகிறார் விஜய்? புதிய சர்வே முடிவு.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved