MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • May Month Rajyogam: அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுது! மே மாத கிரகப் பெயர்ச்சிகளால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

May Month Rajyogam: அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுது! மே மாத கிரகப் பெயர்ச்சிகளால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

ஜோதிட சாஸ்திரப்படி, மே 2026ல் ருசக, புதாதித்ய, கஜகேசரி உள்ளிட்ட 6 வலிமையான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த அரிய கிரக சேர்க்கையால் இந்த நான்கு ராசிகளின் தலையெழுத்தே மாறி, அவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தரப்போகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : May 02 2026, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ராஜயோகம் என்றால் என்ன?
Image Credit : Gemini AI

ராஜயோகம் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் 'ராஜயோகம்' என்பது ஒரு நபர் தனது வாழ்க்கையில் பெறக்கூடிய மிக உயர்ந்த அதிகாரம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் அமரும்போதும் அல்லது ஒன்றோடொன்று இணையும்போதும் இந்த யோகங்கள் உண்டாகின்றன. இந்நிலையில் ஜோதிட சாஸ்திரப்படி 2026 மே மாதம் ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. ஒரே மாதத்தில் ருசக, புதாதித்ய, கஜகேசரி, மாலவ்ய, பத்ர மகாபுருஷ மற்றும் லட்சுமி நாராயண யோகம் என 6 வலிமையான ராஜயோகங்கள் உருவாகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
அதிர்ஷ்ட ராசிகள்
Image Credit : Getty

அதிர்ஷ்ட ராசிகள்

மே 11ம் தேதி செவ்வாய், தனது சொந்த ராசியான மேஷத்தில் பெயர்ச்சி அடைவதால் ருசக ராஜயோகமும், சூரியன் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது. மேலும், சந்திரன் குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும், மே 14ம் தேதி சுக்கிரன் ரிஷபத்தில் பெயர்ச்சி அடைந்து மாலவ்ய ராஜயோகத்தையும், மே 29ம் தேதி புதன் தனது சொந்த ராசியில் பெயர்ச்சி அடைந்து பத்ர மகாபுருஷ ராஜயோகத்தையும், புதனுடன் சுக்கிரன் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றங்களால் சில ராசிகளின் தலையெழுத்தையே மாற்றப்போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

Related Articles

Related image1
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
Related image2
Mercury Combust: மே 1 முதல் புதன் அஸ்தமனம்.. இந்த 4 ராசிக்காரர்களும் ஒவ்வொரு அடியையும் யோசிச்சு வைங்க! அடுத்த 27 நாட்கள் தப்பிப்பது எப்படி?
36
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த 6 யோகங்களும் புதிய உத்வேகத்தைத் தரும். அதுமட்டுமல்ல செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரச் சிக்கல்கள் நீங்கி, பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும்.

46
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

சுக்கிரன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதாலும் மற்ற யோகங்களாலும் ரிஷப ராசிக்கு ராஜயோக பலன்கள் கிட்டும். உங்கள் வருமானம் பல வழிகளில் உயரக்கூடும். முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மட்டுமின்றி, பதவி உயர்வு (Promotion) கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். நிலுவையில் இருந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு இருந்து வந்த தனிப்பட்ட பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்களின் உதவி செய்வார்கள். வருமானம் உயரக்கூடும்.

56
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் சமூகத்தில் அந்தஸ்தையும், மதிப்பையும் உயர்த்தித் தரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் மற்றும் திருமணப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். உங்களுக்கு நிதி ரீதியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

66
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு மே மாதம் மகிழ்ச்சியான செய்திகள் வரும் மாதமாக அமையும். அதிர்ஷ்டம், வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுதிக்கேற்ற புதிய வேலை கிடைக்கும். குறிப்பாக அரசு வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். உங்களைப் பின்தொடர்ந்த தடைகள் யாவும் விலகும். சமுதாயத்தில் உங்கள் புகழ் ஓங்கும். நிதி நெருக்கடிகள் முற்றிலுமாக நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பெருகும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Rasipalan: மே 25 முதல் 31 வார ராசிபலன்! உங்களுக்கு குபேர யோகம் இருக்கா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
Recommended image2
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Recommended image3
Water Bottle Vastu: ஃபிரிட்ஜ்ல பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி வைக்கிறீங்களா? வாஸ்து என்ன சொல்லுது?
Related Stories
Recommended image1
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
Recommended image2
Mercury Combust: மே 1 முதல் புதன் அஸ்தமனம்.. இந்த 4 ராசிக்காரர்களும் ஒவ்வொரு அடியையும் யோசிச்சு வைங்க! அடுத்த 27 நாட்கள் தப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved