MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mercury Combust: மே 1 முதல் புதன் அஸ்தமனம்.. இந்த 4 ராசிக்காரர்களும் ஒவ்வொரு அடியையும் யோசிச்சு வைங்க! அடுத்த 27 நாட்கள் தப்பிப்பது எப்படி?

Mercury Combust: மே 1 முதல் புதன் அஸ்தமனம்.. இந்த 4 ராசிக்காரர்களும் ஒவ்வொரு அடியையும் யோசிச்சு வைங்க! அடுத்த 27 நாட்கள் தப்பிப்பது எப்படி?

மே 1 முதல் புதன் பகவான் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால், அறிவு மற்றும் வியாபாரத்திற்கு காரகனான புதன் பலமிழக்கிறார். இதனால் இந்த 4 ராசிக்காரர்கள் மே 27 வரை மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 01 2026, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதன் பகவான்
Image Credit : Asianet News

புதன் பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் 'நவக்கிரகங்களின் இளவரசன்' என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான். இவர் அறிவு, ஆற்றல், பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்திற்கு காரகத்துவம் வகிப்பவர். இந்நிலையில் புதன் பகவான், மே மாதம் முதல் தேதியன்று மேஷ ராசியில் அஸ்தமனமாகிறார். தகவல் தொடர்பு, அறிவு மற்றும் வியாபாரத்திற்கு காரகத்துவம் வகிக்கும் புதன் பலமிழப்பதால், மே 1 முதல் 27 வரை குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்க வேண்டியது அவசியம். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

25
மிதுனம் - பொறுமை மட்டுமே தாரக மந்திரம்
Image Credit : Asianet News

மிதுனம் - பொறுமை மட்டுமே தாரக மந்திரம்

மிதுன ராசிக்கு அதிபதியே புதன் என்பதால், இந்த அஸ்தமனம் உங்களுக்கு மனரீதியான சிக்கல்களையும் கூடுதல் அழுத்தத்தைத் தரும். அலுவலகப் பணிகள் சுமையாகத் தோன்றும். உங்கள் பேச்சால் குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரலாம். ந்த காலகட்டத்தில் அவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட பெரிய வாக்குவாதங்களாக மாறக்கூடும். ஆகையால் மிதுனம் ராசிக்காரர்கள் அமைதியாக இருங்கள். உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அலட்சியமாக இருக்க வேண்டும்.

Related Articles

Related image1
lucky Zodiac Signs: அரசு வேலை முதல் திருமண யோகம் வரை.. இளமையிலேயே ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவர்கள்தான்!
Related image2
2026 மே மாத குரு-சூரிய சேர்க்கை.. 'ரிஷப' ராசியில் உருவாகும் ராஜயோகம்.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்?
35
கன்னி - வேலைப்பளுவும் மன அழுத்தமும்
Image Credit : Asianet News

கன்னி - வேலைப்பளுவும் மன அழுத்தமும்

புதன் பலமிழப்பதால், கன்னி ராசியினருக்குப் பணியிடத்தில் சில சவால்கள் காத்திருக்கின்றன. மேலதிகாரிகளின் அழுத்தம் அதிகரிக்கலாம். எடுத்துக்கொண்ட வேலைகளை முடிக்க முடியாமல் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களின் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை கெடுக்கும் சில சம்பவங்கள் வாழ்க்கையில் நடைபெறும். அதை தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்காது. ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படும்.

45
விருச்சிகம் - பண விஷயத்தில் கூடுதல் கவனம்
Image Credit : Asianet News

விருச்சிகம் - பண விஷயத்தில் கூடுதல் கவனம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனத்தால் இந்த 27 நாட்கள் பொருளாதார ரீதியாகச் சோதனையான காலம். பணக்கஷ்டங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம். புதிய முதலீடுகள் மற்றும் வியாபார ஒப்பந்தங்களை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு வேலையையும் அவசரமாக எடுக்கும் முடிவுகள் நஷ்டங்களுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, உடல்நலனில் பிரச்சினைகள் ஏற்படலாம். உணவு முறையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

55
மீனம் - சட்டச் சிக்கல்களும் மனக்கவலையும்
Image Credit : Asianet News

மீனம் - சட்டச் சிக்கல்களும் மனக்கவலையும்

மீன ராசியினருக்கு மே மாதம் சற்று மந்தமாகவே இருக்கும். சொத்துத் தகராறு அல்லது நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை ஏற்படலாம். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வாட்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதிய தொழிலில் இறங்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுங்கள். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடும் சூழல் ஏற்படலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit 2026: 2026 மே செவ்வாய் பெயர்ச்சி: நெருப்பாக மாறப்போகும் 5 ராசிகள் - நீங்கள் இதில் இருக்கிறீர்களா?
Recommended image2
Today Rasi Palan : சித்ரா பௌர்ணமி 2026 - இன்று 8 ராசிகளுக்கு ராஜயோகம்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Recommended image3
Gajalakshmi Yoga: 12 வருடத்திற்கு பின் கடக ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை.! கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
lucky Zodiac Signs: அரசு வேலை முதல் திருமண யோகம் வரை.. இளமையிலேயே ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவர்கள்தான்!
Recommended image2
2026 மே மாத குரு-சூரிய சேர்க்கை.. 'ரிஷப' ராசியில் உருவாகும் ராஜயோகம்.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved