MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara : லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் முக்கிய அந்தஸ்தை இழந்து தவிக்கும் நயன்தாரா

Nayanthara : லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் முக்கிய அந்தஸ்தை இழந்து தவிக்கும் நயன்தாரா

லெஜண்ட் படத்தில் நடிகை நயன்தாராவை தான் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்றனர், ஆனால் அவர் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 31 2022, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். இவர் நடிப்பில் உருவான முதல் படம் தி லெஜண்ட். இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்ததோடு, அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக அதிகளவிலான தியேட்டர்களில் வெளியீடு, அதிகாலை 4 மணி காட்சி என அதகளப்படுத்திவிட்டார் அண்ணாச்சி.

26

இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். மேலும் ஊர்வசி ரவ்துலா, விவேக், ரோபோ சங்கர், யோகிபாபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் கடந்த ஜூலை 28-ந் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

36

இப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படத்தில் பலமான டெக்னிக்கல் டீம், அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருந்தாலும், கதை கவரும் வகையில் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. ரஜினியே இப்படத்தில் நடித்திருந்தாலும் ஹிட் ஆகி இருக்காது என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...விஜய் உடன் கூட்டணி அமைக்கிறாரா டான் பட இயக்குனர்?... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிபி சக்ரவர்த்தி

46

இது ஒருபுறம் இருந்தாலும், இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவ்துலாவுக்கு லெஜண்ட் சரவணன் கொடுத்த சம்பளம் பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் இப்படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா கூட இதுவரை இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லை.

56

முன்னதாக இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை தான் முதலில் அணுகினர். ஆனால் அவரோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம் நயன். இதையடுத்து தான் பாலிவுட்டில் இருந்து ஊர்வசி ரவ்துலாவை களமிறக்கிய அண்ணாச்சி, அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக கொடுத்து, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற வைத்துள்ளார்.

66

இதன்மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற அந்தஸ்துடன் இருந்த நடிகை நயன்தாரா, தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததன் காரணமாக, தற்போது அவர் முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். தற்போது நடிகை நயன்தாரா, ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...3000 பேர் இதுவே முதல் முறை... நடிகை ரோஜா நிகழ்த்திய வித்தியாசமான கின்னஸ் சாதனை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved