சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது.. அமலாக்கத்துறை எடுத்த அதிரடி முடிவு !
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்பி-யுமான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான தொழில் அதிபர் பிரவின் ராவத்தை கைது செய்தது. அதுமட்டுமல்லாமல் சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகளை முடக்கியது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
கடந்த 10-ம் தேதி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர் அவருக்கு இரண்டாவது முறையாக கடந்த ஜூலை 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதை காரணம் காட்டி அவர் அன்று ஆஜராகவில்லை.
இந்த சூழலில் இன்று அவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..சந்தன கடத்தல் வீரப்பன் டூ டெல்லி காவல் ஆணையர்.. யார் இந்த சஞ்சய் அரோரா ?