D இல்லேனா இந்த A இல்ல... திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்சில் தனுஷ் குறித்து அனிருத் உருக்கம்
Anirudh : மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இசையமைப்பாளர் அனிருத் கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதையடுத்து அவர் இசையமைத்த படங்களெல்லாம் அடுத்தடுத்து ஹிட்டாகின. இதனால் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார் அனிருத்.
அனிருத் பல்வேறு நடிகர்களுடன் பணியாற்றி இருந்தாலும், அவர் தனுஷுடன் பணியாற்றும் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. ஏனெனில் இவர்கள் கூட்டணியில் இதுவரை வெளியான 3, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன், மாரி 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இதனால் இவர்கள் காம்போவை சுருக்கமாக DnA என குறிப்பிட்டு வந்தனர்.
இதையும் படியுங்கள்... இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான்.... அட்லீயை மறைமுகமாக விமர்சித்த பாலிவுட் பிரபலம்
தனுஷ் அனிருத் காம்போவில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் உருவாகி உள்ள படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தனுஷ், அனிருத், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது : “உள்ள வந்ததும் FDFS பாக்குற மாதிரி இருந்துச்சு. 2010-ல் ஒரு நாள் சோகமா உக்காந்து தனுஷ்ட பேசிட்டு இருந்தேன். அப்போ அவர், நீ வேணா பாருடா, இன்னும் 10 வருஷத்துல நீ எந்த இடத்துல இருக்கேனு சொன்னாரு. அது நடந்துருச்சு. DnA-னு சொல்றாங்க, D இல்லேனா இந்த A இல்ல” என உருக்கமாக பேசிய அனிருத், ரசிகர்களுக்காக பாடல்களை பாடி அசத்தினார்.
இதையும் படியுங்கள்... ‘வட சென்னை 2’ எப்போ தொடங்கும்? - திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் சொன்ன மாஸ் அப்டேட்