ரீல் மற்றும் ரியல் நம்பி நாராயணனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி! காலில் விழுந்து ஆசிபெற்ற மாதவன்
R Madhavan : ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மாதவனையும், விஞ்ஞானி நம்பி நாராயணனையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த மாதவன், முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. இப்படத்தை இயக்கியதோடு, அதில் நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இந்த ராக்கெட்ரி திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இப்படம் கடந்த ஜூலை 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... D இல்லேனா இந்த A இல்ல... திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்சில் தனுஷ் குறித்து அனிருத் உருக்கம்
இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாகவே வாழ்ந்து இருப்பதாக பலரும் பாராட்டினர். அதுமட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரன், ஜெகன் முதல் சிறிய கேமியோ ரோலில் நடித்த சூர்யா, ஷாருக்கான் வரை அனைவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருந்தது.
இந்நிலையில், நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த நடிகர் மாதவம் நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரன்வீருக்கு ஆதரவு..! மேலாடை இன்றி அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த கிரண் - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ