ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள்.
Tamil News live : எடப்பாடி Vs பன்னீர்செல்வம் - பிரதமர் மோடி யாரை சந்திக்கிறார் ?

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக நாளை மாலை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது அரை மணி நேரம் மட்டும் பாஜக நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசுகிறார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்டிருக்கிறார்கள். இந்த சந்திப்பு நடக்குமா ? நடக்காதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடியா ? பன்னீர்செல்வமா? - பிரதமர் மோடி யாரை சந்திக்கிறார் ?
குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மக்கள் குளித்துக்கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 5 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். அதில், பண்ருட்டியை சேர்ந்த கலாவதி, சென்னையை சேர்ந்த மல்லிகா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
திருச்சியில் திடீரென திரண்ட ரசிகர்களுக்காக மாஸ்டர் விஜய் பாணியில் அஜித் செய்த மாஸ் சம்பவம் - வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அங்கு நடிகர் அஜித்தை பார்க்க குவிந்தனர். இந்த தகவல் நடிகர் அஜித்திற்கு தெரியவர, அவர் உடனடியாக திருச்சி ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.மேலும் படிக்க
ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா..! அடுத்தடுத்து வந்த அப்டேட்டுகளால் திக்குமுக்காடிப் போன தனுஷ் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி முதலில் அவர் நடித்துள்ள வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.மேலும் படிக்க
கடனை திருப்பி கேட்டது குத்தமா... ‘சதக் சதக்’ என சரமாரியாக வெட்டிய வில்லன் நடிகரை புடிச்சு ஜெயில்ல போட்ட போலீஸ்
நடிகர் வினீத் தட்டில் டேவிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்க வந்தவரை நடிகர் ஒருவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் படிக்க
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த சசிகுமார் கைது
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் உள்ள மோடியின் படத்தை கருப்பு மையால் அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுச்செயலாளர் பதவி.. உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சசிகலா மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 2வது வாரம் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு வர உள்ளது.
கபடி வீரர் உயிரிழப்பு... முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது.. அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
மின் கட்டணம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த மின் கட்டணமே. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. தைரியமிருந்தால் மின்துறை மீது வழக்கு தொடரட்டும் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தலையணையுடன் உடலுறவு, சக மாணவிகள் பற்றி ஆபாசம்.. அதிர வைக்கும் ராகிங் கொடுமை.. வெளியான பகீர்.!
அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி ராகிங் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..பச்சை வண்ண டவுசர் மட்டும் அணிந்து...அலப்பறை பண்ணும் நாயகி!
ஆண்ட்ரியா பச்சை நிற ட்ரவுசர்,ஜிம்மிஸ் மட்டும் அணிந்து மேல் கோட்டை கழட்டி கையில் பிடித்தவாறு கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க... ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..பச்சை வண்ண டவுசர் மட்டும் அணிந்து...அலப்பறை பண்ணும் நாயகி!
என்னது நிர்வாணமாக நடித்தேனா? உண்மையை உடைத்த இரவின் நிழல் நாயகி!
நிர்வாண காட்சியில் நடிக்க நான் குட்டியான உடை அணிந்திருந்தேன். எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அந்த உடை மேலே இழுத்து விட்டால் அணிந்திருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான் என கூறியுள்ளார் பிரிகிடா.
மேலும் படிக்க...என்னது நிர்வாணமாக நடித்தேனா? உண்மையை உடைத்த இரவின் நிழல் நாயகி!
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - இதுதான் மெனு
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - இதுதான் மெனு

அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!
சென்னையில் அஜித் இன்றி ஏ.கே 61 -ன் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கின் போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!
ஸ்ரீமதி, சரளா உடல் நல்லடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்காதது ஏன்? விடாமல் திமுகவை சீண்டும் வன்னியரசு
ஸ்ரீமதி, சரளா மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் பதில் சொல்வாரா? என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க
'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!
சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமேன்’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
மேலும் படிக்க...'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!
உலக நாடுகளுக்கு தெரிந்தவர் மோடிதான்.. எங்கே பிரதமர் போட்டோ..?? ஸ்டாலினை உலுக்கி எடுக்கும் ஆளுநர் தமிழிசை
மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் எந்த இடத்திலும் இடம்பெறவில்லையென புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!
கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவார கொண்டா இது வேண்டாம் என பதிலளிக்கிறார்.
மேலும் படிக்க...அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!
மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பள்ளி நிர்வாகிகள் இருவர், ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி உத்தரவு மேலும் படிக்க
பைக் உலாவை தொடர்ந்து வைரலாகும் அஜித்தின் ரைபிள் கிளப் வீடியோ !
சென்னை திரும்பி உள்ள இவரின் ஏர்போர்ட் வீடியோ நேற்று வைரலானது. இதில் அஜித் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் நடிகரை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
மேலும் படிக்க...பைக் உலாவை தொடர்ந்து வைரலாகும் அஜித்தின் ரைபிள் கிளப் வீடியோ !