Dhanush : நடிகர் தனுஷ் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவர் நடித்த படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

நடிகர் தனுஷ் நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி முதலில் அவர் நடித்துள்ள வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி அப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து இன்று மாலை தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்தில் இருந்து சர்ப்ரைஸ் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. நடு காட்டில் கையில் அம்புடன் வித்தியாசமான கெட் அப்பில் தனுஷ் அந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தாணு இப்படத்தை தயாரித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் அண்ணாச்சி... அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்டை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்

இதுதவிர அவர் நடிப்பில் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்தும் இன்று ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டு உள்ளது. லைஃப் ஆஃப் பழம் என பெயரிடப்பட்டு உள்ள இப்பாடலை அனிருத் பாடி உள்ளார். விவேக் இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

Scroll to load tweet…

திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 18-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தை தயாரித்த நெட்பிளிக்ஸ் நிறுவனம். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அப்படத்தில் நடித்தபோது எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தனுஷும் இதற்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... கடனை திருப்பி கேட்டது குத்தமா... ‘சதக் சதக்’ என சரமாரியாக வெட்டிய வில்லன் நடிகரை புடிச்சு ஜெயில்ல போட்ட போலீஸ்