பிரதமர் மோடி படத்தின் மீது கருப்பு மை பூச்சு.. பரபரப்பை ஏற்படுத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் !

பிரதமர் மோடியின் படத்தை கருப்பு மையால் அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Periyar Dravida Kazhagam defaced Prime Minister Modi picture with black ink at Chennai

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.  இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனது.  தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.  எனினும், இது தொடர்பாக அமைச்சர் மெய்யநாதன்,பிரதமர் மோடியின் படம் எங்கும் புறக்கணிக்கவில்லை, போட்டியை தொடங்கி வைப்பதே பிரதமர் தான் என்று கூறியிருந்தார். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !

செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர். இதுபற்றி பேசிய அமர் பிரசாத், 'இது திமுக நிகழ்ச்சி அல்ல. சர்வதேச செஸ் ஒலிம்பிக் போட்டி. பிரதமர் புகைப்படத்தை போடாதது மிகப் பெரிய குற்றம்' என்று கூறினார்.

Periyar Dravida Kazhagam defaced Prime Minister Modi picture with black ink at Chennai

இந்நிலையில் பிரதமர் மோடியின் படத்தை கிழித்தும், மை பூசி அழித்தும், அலங்கோலமாக மாற்றி மேலும் பதற்றத்தை  தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் உள்ள மோடியின் படத்தை கருப்பு மையால் அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios