என்னது நிர்வாணமாக நடித்தேனா? உண்மையை உடைத்த இரவின் நிழல் நாயகி!
நிர்வாண காட்சியில் நடிக்க நான் குட்டியான உடை அணிந்திருந்தேன். எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அந்த உடை மேலே இழுத்து விட்டால் அணிந்திருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான் என கூறியுள்ளார் பிரிகிடா.
இரவில் நிழல் படத்தில் பார்த்திபனுடன் நடித்திருந்த பிரிகிடா சாகா ஷ்லம் மக்கள் குறித்து பேசி இருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.முன்னதாக இந்த படத்தில் மோசமான வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்து இருந்த இவர் ஷ்லம் ஏரியாக்களில் போய் பாருங்கள் இப்படித்தான் பேசுவார்கள் இதை தவிர்க்க முடியாது. படத்திற்காக பொய் கூற இயலாது எனக் கூறி மிகப் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். இதை அடுத்து பார்த்திபனும் பிரிகிடாவும் மாறி மாறி மன்னிப்பு கேட்டனர்.
இந்த பிரச்சனை ஓய்வதற்குள் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் படத்தில்நாயகிகள் நிர்வாணமாக நடித்தது குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர். இதனால் கடுப்பான இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் ரங்கநாதனை பீச்சில் வைத்து கடுமையாக விளாசினார். இது குறித்தான வீடியோக்கள் வைரலாகியது.
மேலும் செய்திகளுக்கு...அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!
இந்நிலையில் நடிகை பிரிகிடா தான் நிர்வாணமாக நடித்தது குறித்த உண்மையை உடைத்துள்ளார். இந்த காட்சி குறித்து பிரிகிடா பேசியிருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. அதில் நிர்வாண காட்சியில் நடிக்க நான் குட்டியான உடை அணிந்திருந்தேன். எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அந்த உடை மேலே இழுத்து விட்டால் அணிந்திருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான். உண்மையிலேயே நான் அந்த காட்சியில் நடிக்க ரொம்ப சிரமப்பட்டேன் ஏனென்றால் குட்டியான உடை அணிவதை நான் விரும்பவில்லை என கூறியுள்ள பிரிகிடா, எப்படி இந்த காட்சியில் நடிக்க போகிறேன் என்ற பயத்துடன் இருந்ததாகவும், 90 நாட்களும் இந்த காட்சிக்காக தான் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!
அதோடு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தன் நிர்வாணமாக நடிக்கவில்லை உடை அணிந்துள்ளேன் என எழுதி ஹார்ட் பிரேக்கிங் இமோஜியை பகிர்ந்து உள்ளார் நடிகை. இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த பிரிகிடாவிற்கு இந்த படத்தின் மூலம் நடிகையாகும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பார்த்திபன். ஒத்த செருப்பு என்னும் புதுமையான திட்டத்தை தொடர்ந்து தற்போது இரவில் நிழல் படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!
இந்த படம் உலகிலேயே முதல் நான் லீனர் சிங்கிள் ஷாட் படம் என பாராட்டுகளை பெற்று வருகிறது. நேரியல் அல்லாத ஒற்றை ஷாட் படமான இது 90 நாட்கள் ஒத்திகைக்கு பிறகு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ரூத், பிரிகிடா சாகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கதை சொல்லும் பாணியில் அமைந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியான இரவின் நிழல் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. 56 செட்டுகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி சாதனை புரிந்துள்ளார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.