Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீமதி, சரளா உடல் நல்லடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்காதது ஏன்? விடாமல் திமுகவை சீண்டும் வன்னியரசு

ஸ்ரீமதி, சரளா மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Why did Minister Anbil Mahesh not participate in the funeral? Vanniarasu question
Author
Tamil Nadu, First Published Jul 27, 2022, 1:42 PM IST

ஸ்ரீமதி, சரளா மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் பதில் சொல்வாரா? என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் அமைதியான முறையில் அறவழியில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கடந்த 17ம் தேதி வன்முறையாக வெடித்தது. 

இதையும் படிங்க;- ஸ்ரீமதிக்காக போராட்டம்: ஆதி திராவிட இளைஞர்களை வீடு புகுந்த வேட்டையாடும் போலீஸ்.. கொந்தளிக்கும் வன்னி அரசு.

Why did Minister Anbil Mahesh not participate in the funeral? Vanniarasu question
இதில், போலீஸ், பள்ளி வாகனங்கள் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. அப்போது காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்தது, அதில் 50க்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீமதி உடல் கடந்த 23ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேபோல், பள்ளி மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு நல்லடக்கம் செய்தனர். இந்த இரண்டு நிகழ்விலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்காதது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீமதி மற்றும் சரளா ஆகியோர் நல்லடக்கத்தில் அமைச்சர் அன்பில் அன்பில் மகேஷ் ஆறதல் சொல்லாதது ஏன் என திமுக கூட்டணி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க;-  கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உளவுத்துறையில் சாதிய வாதிகள்.. விசிகவுக்கு எதிரான சதி.. அலறும் திருமா.!

Why did Minister Anbil Mahesh not participate in the funeral? Vanniarasu question

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஶ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாணவி சரளா மரணித்துள்ளார். இருவர் உடலும் நல்லடக்கம் செய்தாலும், மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் @Anbil_Mahesh ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் பதில் சொல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

முன்னதாக பள்ளி பிள்ளைகளின் மரணங்கள் பெரும் சந்தேகங்களையும் துயரத்தையும் தருகிறது. பிள்ளைகளிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் உண்டு. அதற்கான பணியை செய்யாமல் கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios