கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உளவுத்துறையில் சாதிய வாதிகள்.. விசிகவுக்கு எதிரான சதி.. அலறும் திருமா.!

ஆங்கில நாளேடு ஒன்றில் மாணவி மரணத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Kallakurichi student death.. Casteists in intelligence.. thirumavalavan

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அமைதியான வழியில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறை வெடித்தது. இதில், பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. மேலும்,  தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். போராட்டாக்காரர்கள் கற்களால் தாக்கியதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி வன்முறை.. போலி தகவலை பரப்பியவருக்கு ஆப்பு.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

Kallakurichi student death.. Casteists in intelligence.. thirumavalavan

இந்த வன்முறை தொடர்பாக பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றில் மாணவி மரணம் தொடர்பாக போராட்டத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது.

 

கீழுள்ள ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது என திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios