திருச்சியில் திடீரென திரண்ட ரசிகர்களுக்காக மாஸ்டர் விஜய் பாணியில் அஜித் செய்த மாஸ் சம்பவம் - வைரலாகும் வீடியோ
Ajith in Trichy : திருச்சி ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்தபோது அவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது. இதையடுத்து அவரை அழைத்து சென்று விசாரணையும் நடத்தினர். இந்த பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக வந்த நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலியில் திரண்டனர்.
ரசிகர்கள் கூடி இருப்பதை அறிந்த விஜய், அங்கிருந்த பேருந்தின் மேல் ஏறி நின்று அங்கு கூடி இருந்த ரசிகர்களைப் பார்த்து கையசத்தபோடு மட்டுமின்றி, தனது போனில் செல்ஃபி போட்டோவும் எடுத்தார். அந்த புகைப்படத்தை பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தன்னை காண வந்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார் விஜய்.
இதையும் படியுங்கள்... Watch : திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்!
இந்நிலையில், அதேபோல் ஒரு மாஸ் சம்பவத்தை செய்திருக்கிறார் அஜித். நடிகர் அஜித் திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அங்கு நடிகர் அஜித்தை பார்க்க குவிந்தனர். கூட்டம் அதிகமானதால் போலீசாரால் கூட அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த தகவல் நடிகர் அஜித்திற்கு தெரியவர, அவர் உடனடியாக திருச்சி ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்ததோடு மட்டுமின்றி தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துப் போயினர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா..! அடுத்தடுத்து வந்த அப்டேட்டுகளால் திக்குமுக்காடிப் போன தனுஷ் ரசிகர்கள்