தலையணையுடன் உடலுறவு, சக மாணவிகள் பற்றி ஆபாசம்.. அதிர வைக்கும் ராகிங் கொடுமை.. வெளியான பகீர்.!

அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி ராகிங் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

Sex With Pillow... MGM Medical College ragging in Madhya Pradesh

அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி ராகிங் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி (எம்ஜிஎம்), அம்மாநிலத்தின் மிகப் பெரிய மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாமாண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் மோசமாக ராகிங் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மானியக் குழுவுக்கும், ராகிங் தடுப்பு உதவி மையத்துக்கும் ஜூனியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக  ஜூனியர் மாணவர்கள் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியுடன் உல்லாசம்..! தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலர்களை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!

Sex With Pillow... MGM Medical College ragging in Madhya Pradesh

அதில், சீனியர் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு வரவழைக்கப்பட்ட முதலமாண்டு மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுத்தி நடிக்க வைத்துள்ளனர். சக மாணவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி ஆபாசமாகப் பேசவும் சீனியர் மாணவர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறினர். 

முதலாமாண்டு மாணவர்களின் செல்போன்களைப் பிடுங்கிவைத்துக்கொண்ட சீனியர் மாணவர்கள், அவர்களை தோப்புக்கரணம் போடுமாறும், ஒருவரையொருவர் ஓங்கி அறைந்துகொள்ளுமாறும் துன்புறுத்தினர் என்றார். இதுதொடர்பாக, சில பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க;- என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்

Sex With Pillow... MGM Medical College ragging in Madhya Pradesh

புகார் தெரிவித்தால், வரும் காலத்தில் சீனியர்கள் தங்களைப் பழிவாங்கலாம் என்பதால் ஜூனியர் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்தச் செயல்களில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios