என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்
திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலனை தட்டிக் கேட்ட காதலியின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலனை தட்டிக் கேட்ட காதலியின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னிபோரய்யனஹட்டியை சேர்ந்த போஜராஜா (23), அதே ஊரைச் சேர்ந்த நிர்மலாவும் (21) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க;- பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.. வேலை முடிந்ததும் சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்.!
இதை அறிந்து கொந்தளித்த நிர்மலா என்னை ஏமாற்றி விட்டாயே என்று கூறி காதலனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தங்கள் காதல் விவகாரம், நெருக்கமான புகைப்படங்களையும் அவரது மனைவியிடம் சொல்லி விடுவதாக போஜராஜாவை மிரட்டியுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த நிர்மலாவிடம் போஜராஜா தகராறு செய்துள்ளார். அப்போது, இவருக்கும் தகராறு முற்றிய நிலையில் தான் கொண்டு வந்த அரிவாளால் நிர்மலாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், நிர்மலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஆனால், ஆத்திரம் அடங்காததால் அவர் தலையை தனியாக துண்டித்து எடுத்தார்.
இதையும் படிங்க;- மது போதையில் ஓங்கி அடித்த கணவன்.. மனைவி செய்த விபரீத சம்பவம் - வெளியான அதிர்ச்சி காரணம்.!
பின்னர், நிர்மலாவின் தலையை எடுத்துக் கொண்டு கானஹொசஹள்ளி காவல் நிலையத்துக்கு சென்றார். இதனை பார்த்து அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். போஜராஜாவை கைது செய்த காவல்துறையினர் நிர்மலாவின் தலையை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- 31 வயது ஆன்ட்டி குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 21 வயது இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?