ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியுடன் உல்லாசம்..! தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலர்களை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!
கள்ளக்காதலர்களை ஏவி, கணவரை துண்டு, துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதலர்களை ஏவி, கணவரை துண்டு, துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தலை சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரது மனைவி சாந்தி (33). ஒரு மகன், 2 மகள் உள்ளனர். புரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் வேலை பார்த்த பிச்சைக்கனி, கடந்த மே 25ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். 27ம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, தேவிபட்டினம் காவல் நிலையத்தில் கணவரை காணவில்லை என புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவங்க கிட்ட போற.. ஓயாமல் டார்ச்சர்.. பெண் செய்த பகீர் சம்பவம்.!
இதற்கிடையே காணாமல் போன பிச்சைக்கனியின் தந்தை குப்பு தன் மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் அவனது மனைவி மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பிச்சைக்கனியின் மனைவி சாந்தியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவருடைய செல்போனை வாங்கி யாரிடம் பேசி இருக்கிறார் என்பதை போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் அவரது உறவினர்களான பார்த்திபன் மற்றும் கலை மோகன் என்ற இருவருடனும் சாந்தி அதிகமாக பேசியிருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தேவிபட்டினம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தை சேர்ந்த கலை மோகன் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பார்த்திபன், அவரது தம்பி கலைமோகனுடன், சாந்திக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில், கலைமோகனிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து பிச்சைக்கனியை கொலை செய்யுமாறு சாந்தி கூறியுள்ளார். அதன்படி மே 27ம் தேதி பார்த்திபன், கலைமோகன் ஆகியோர் பிச்சைக்கனியை மது குடிக்க அழைத்துச் சென்று அரிவாளால் துண்டு, துண்டாக வெட்டி அதன் பின்னர் அரசலூர் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவர்.!
பிச்சைக்கனி உடல் பாகங்களை எலும்புக்கூடுகளாக தேவிபட்டினம் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தொடர்புடைய பார்த்திபன் மே 30ம் தேதி சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். கலைமோகனை (26) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தமான் தப்பிச் செல்ல மதுரை விமான நிலையம் அருகே பதுங்கியிருந்த சாந்தியை தனிப்படை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.