ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக நாளை மாலை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது அரை மணி நேரம் மட்டும் பாஜக நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசுகிறார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்டிருக்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு எட்டு மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு தங்குகிறார் பிரதமர் மோடி. அன்று இரவில் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச அவர் திட்டமிட்டு இருக்கிறார். இரவு 8:30 மணிக்கு மேல் நடைபெறும் இந்த சந்திப்புகளில் முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள் என்ற தகவல் இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !
தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த சந்திப்பு நிகழ வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பிரதமர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அதிமுகவின் முழு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது.
பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அதே பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதோடு ஒற்றைத் தலைமை விவகாரம் முடிந்து விட்டது எனக் கருதிய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, ஓ.பன்னீர்செல்வம் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
தன்னை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம் நீக்கினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று, தலைமை தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்துள்ளார். நீதிமன்றத்திலும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை, அந்த பொறுப்புகளில் நியமனம் செய்து வருகிறார். இப்படி, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் புதிய நிர்வாகிகளை, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..பிரதமர் மோடி படத்தின் மீது கருப்பு மை வீச்சு.. பரபரப்பை ஏற்படுத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் !
தலைமை தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சட்டப்பேரவை, வங்கிகள், காவல்துறை என பல வகைகளில் எடப்பாடி தரப்பு மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அடுத்தடுத்து பல்வேறு வகையான இடையூறுகளை உருவாக்கி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் அந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆம் தேதி அன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இபிஎஸ் தப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பின் நியாயத்தை கேட்க வேண்டும் என்று அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில் இந்த வழகானது நாளை 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
![]()
விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கருதப்படுகிறது. டெண்டர் முறை கேடு ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு நீங்குமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பிறகே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது தெரியவரும். எனவே நாளை இரவு நடக்கப்போகும் சந்திப்பு அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இதுவரை பிரதமர் தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !
