இமெயிலை கண்டுபிடித்த தமிழர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News live : கோபண்ணாவின் மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
Asianet Tamil News live : கோபண்ணாவின் மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் கோபண்ணா மாமனிதர் நேரு என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Twitter New CEO: எலான் மஸ்க் பதவிக்கு வரும் தமிழர்.. யார் இந்த சிவா அய்யாதுரை.? வியக்கவைக்கும் வரலாறு!
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!
பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு கிடைக்கும் என்றும், டோக்கன் எவ்வாறு வாங்குவது என்பதையும் இங்கு காணலாம்.
விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது !! எந்த நாடு தெரியுமா?
விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது. இது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துணிஞ்சா வெற்றி நமதே... வெளியானது துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ பாடல்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் கேங்ஸ்டா பாடல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு... கியூட்டாக கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு அவர்களுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படத்தை கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. வழக்கம் போல அரசியல் பேசாமல், குட்டி ஸ்டோரிஸ் மட்டும் சொன்னார் விஜய்.
பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத கமல்ஹாசன்... கலங்கிப்போன ஹவுஸ்மேட்ஸ் - எமோஷனல் வீடியோ இதோ
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத காட்சிகளுடன் கூடிய புரோமோ வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
ஆளவிடுங்கடா சாமி... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு..!
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக, தற்போது வடிவேலு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க
உலகின் சிறந்த உணவு இதுதான்.! 2022ம் ஆண்டின் டாப் 50 நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்தியாவின் உணவு வகைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சாம்... வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட்டை வெளியிட்ட பிரபலம்
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
1.5 டன் தக்காளிகள்.. சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம் - வைரல் வீடியோ!
இந்தியாவில் எந்தவொரு தினம், பிறந்தநாள், நினைவுநாள், கொண்டாட்டம் என எந்த நிகழ்ச்சி வந்தாலும் தனக்கே உரிய பாணியில் மணல் சிற்பத்தை வடிப்பதில் வல்லவர் சுதர்சன் பட்நாயக்.
ராஷ்மிகா முதல் ரம்யா பாண்டியன் வரை... சினிமா நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சினிமா நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம். மேலும் படிக்க
ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 20 வயது சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்
இந்தியில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான 'அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்' என்கிற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் துனிஷா சர்மா. இவருக்கு வயது 20. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
நயன்தாரா குறித்து ஆபாசமாக கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்... செருப்படி பதில் கொடுத்த சின்மயி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாடகி சின்மயி, நடிகை நயன்தாராவை கிண்டலடித்தவர்களை கடுமையாக சாடி அவர்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். மேலும் படிக்க
வாரிசு ஆடியோ லாஞ்சில் மறைமுகமாக தான் ஒரு அஜித் ரசிகர் என நிரூபித்த விஜய்... இதை கவனித்தீர்களா?
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அஜித் பற்றி பேசாமல் இருந்தாலும், தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளார். மேலும் படிக்க
இன்னொரு பாதிப்பை நாடு தாங்காது; பகீர் கிளப்பும் விஜயபாஸ்கர்
இந்தியாவிலேயே நம்பர் 1 துறையாக இருந்த தமிழக சுகாதாரத்துறை திமுக ஆட்சி காலத்தில் ICU வில் இருப்பதாக முன்னாள் சுகாராத்துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.மேலும் படிக்க
கோவையில் என்.ஐ.ஏ..! கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை நேரில் அழைத்து சென்று விசாரணை- பாதுகாப்பு அதிகரிப்பு
கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை கோவை உக்கடம் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! சிகிச்சைக்காக நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி
தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க
19 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்
இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரையில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க