Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத கமல்ஹாசன்... கலங்கிப்போன ஹவுஸ்மேட்ஸ் - எமோஷனல் வீடியோ இதோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத காட்சிகளுடன் கூடிய புரோமோ வெளியாகி உள்ளது.

Kamalhaasan cried while speaking about ambedkar in Bigg Boss season 6 Tamil
Author
First Published Dec 25, 2022, 6:08 PM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 21 போட்டியாளர்களுடன் கலகலப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதிலும் இந்த வாரம் தனலட்சுமி எலிமினேட் ஆகிவிட்டதால் 9 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் முதலில் ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என மூன்று காலகட்டங்களுக்கு ஏற்ப போட்டியாளர்கள் தங்களை மாற்றிக்கொண்டு விளையாடினர்.

இதையும் படியுங்கள்... எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சாம்... வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட்டை வெளியிட்ட பிரபலம்

இதன் இடையே போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க்கும் நடத்தப்பட்டது. இதில் பலரும் தங்களது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி எமோஷனல் ஆகி கண்கலங்கினர். இறுதியாக விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரின் கடிதமும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் விக்ரமன் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார். அதில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனக்காக ஒரு பைசா கூட சேர்த்து வைக்காத தந்தை அவர் என விக்ரமன் சொன்னதும் எமோஷனல் ஆன கமல் கண்கலங்கினார். பின்னர் 1990-களில் தான் எழுதிய கடிதம் ஒன்றை எடுத்து கமல் படிக்க தொடங்கிய கமல் இந்த கடிதத்தை எழுதும்போது தனக்கு கண் கலங்கிவிட்டதாக கூறினார். அந்த கடிதத்தில் கமல் என்ன எழுதி உள்ளார் என்பது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு..!

Follow Us:
Download App:
  • android
  • ios