பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் வீட்டு தலை டாஸ்கில் வெற்றிபெற்று கானா வினோத் நாமினேஷனில் இருந்து தப்பி இருக்கிறார். அவர் தவிர யாரெல்லாம் நாமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.
Bigg Boss Nomination List : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே பாக்கி உள்ளது. இருப்பினும் யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்பதை தற்போது வரை கணிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களிடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. யார் வெற்றி வாகை சூடப்போகிறார்கள் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் வீட்டு தலையாக ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்படுவார். அவர் தான் இந்த வீட்டை அந்த வாரம் முழுக்க நிர்வகிக்க வேண்டும். வீட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் வீட்டு தலை தான் தீர்வு காண வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும். இந்த சீசனில் வீட்டு தலை ஆக தேர்வு செய்யப்படும் நபருக்கு தனி அறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான வீட்டு தலை டாஸ்க்கில் வெற்றி பெற்று கானா வினோத் வீட்டு தலை ஆகி உள்ளார்.

பிக் பாஸ் நாமினேஷன்
இதனால் இந்த வார நாமினேஷனில் இருந்தும் கானா வினோத் தப்பித்திருக்கிறார். இதையடுத்து இந்த வாரத்திற்கான ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் கார்டன் ஏரியாவில் விதவிதமான பெயிண்டுகள் வைக்கப்பட்டிருக்க, அந்த பெயிண்டை கையில் எடுத்து, தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளரின் முகத்தில் பூசிவிட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு காரணத்தை சொல்லி இருவரை நாமினேட் செய்ய வேண்டும்.
இறுதியாக நாமினேஷன் முடிவில், இந்த வாரம் கானா வினோத் தவிர எஞ்சியுள்ள 11 போட்டியாளர்களும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். அதேபோல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றால், யார்... யார் எலிமினேட் ஆவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும். அநேகமாக அதில் ஒரு போட்டியாளராக சாண்ட்ரா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


