- Home
- Cinema
- அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
Bigg Boss Tamil Double Eviction Ramya Joo and Viyana : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் முதலில் ரம்யா ஜோ எலிமினேட் ஆன நிலையில் அடுத்து எந்த போட்டியாளர் எலிமினேட்டாகியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

Ramya Jo Eviction, Viyana Eviction
விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரையில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், திவாகர், கெமி, பிரஜன் என்று ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் சனிக்கிழமை அன்றே ரம்யா ஜோ வெளியேறினார். இதற்கு முன் சில நாட்களுக்கு முன்னதாக நடந்த எபிசோடில் நான் உடனே வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
Bigg Boss Tamil Double Eviction
பிறகு மன்னிப்பு கேட்டுக் கொண்டு நான் விளையாடுகிறேன் என்று கூறியதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் இதில் ஒரு டுவிஸ்டாக இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன் உள்ளதாக பிக் பாஸால் தெரிவிக்கப்பட்டுள்ளது முதல் எலிமினேட்டாக ரம்யா ஜோ எலிமினேஷன் ஆன நிலையில் தற்போது வியானா எலிமினேஷன் ஆகுவதை பிக் பாஸ் டீமால் வெளியிடப்பட்டுள்ளது.
ரம்யா ஜோ, Bigg Boss Tamil Today Episode
கடந்த வாரத்தில் ரம்யா ஜோ வீட்டு தலையானதில் சரியான பங்கேற்பும் ஆர்வம் காட்டாத நிலையில் அவரை அவுட் ஸ்நாக்ஸ் மற்றும் விஜய் சேதுபதியால் விமர்சனம் வந்ததால் வார இறுதியில் விஜய் சேதுபதி சற்று கோபம் கொண்டு பேசியதால் நான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என்று ஒரு அதிரடி முடிவை எடுத்து வைத்தார். அதனால் பிக் பாஸ் வீட்டு கதவும் ஓபன் செய்திருந்த நிலையில் அதன் பிறகு தப்பை உணர்ந்து நான் மீண்டும் வீட்டில் இருப்பதாக முடிவு எடுத்துள்ளேன். என்னை மன்னிக்கவும் மாதிரி விஜய் சேதுயிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வீட்டில் பயணித்தார். அதன் பிறகு இந்த வார இறுதியில் ரம்யா ஜோ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ரம்யா ஜோ டான்சர்
ரம்யா ஜோ கர்நாடகவை சேர்ந்த ஒரு சாதாரண பெண்தான் ஆனால் அவருக்கு அங்கே என் எந்தவிதமான வாய்ப்பும் கிடைக்காத நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்து நடன கலைஞரால் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வந்தார். அவர் அந்த நடன நிகழ்ச்சியில் யாராவது அவதூறாக பேசி இருந்த நிலையில் அவர்களை சரமாரியாக திட்டியும் கடுமையாக பேசியும் சோசியல் மீடியாக்களில் வீடியோ மூலம் டிரெண்டானார்.
இதன் மூலமாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னதாக தாமரை பல நிகழ்ச்சிகளில் நடமாடிய நிலையில் அவருக்கு பிக் பாஸ் தமிழ் 5 வாய்ப்பு கொடுக்கவே இப்போது சின்ன மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.
வியானா:
ஆரம்பத்தில் ரம்யா ஜோவின் விளையாட்டு நன்றாக இருந்தால் நிலையில் அதற்கு பிறகு அவர் தடுமாறினார் என்று கூறலாம். கடந்த வாரத்தில் அவர் செய்தது ரசிகர்களின் மத்தியில் விமர்சனத்தை எழுப்பி வந்த நிலையில் இந்த வாரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
வியானா:
வியானா ஆரம்ப கட்டத்தில் ஒரு சிறந்த போட்டியாளராகவும் பிரபலமான போட்டியாளராகவும் மற்றவர்களுக்கு டஃப் கண்டஸ்டண்ட் ஆகவும் இருந்து வந்தார். ஒவ்வொரு போட்டிகளிலும் தனது தனி திறமையை எடுத்துக்காட்டி வந்தார். கொஞ்சி கொஞ்சி பேசும் பேச்சும் வீட்டில் ஒவ்வொருவரையும் குறித்து சரியான திட்டமும் உள்ள ஒரு நல்ல போட்டியாளர் என்று ரசிகர்களால் பேசப்பட்டு வந்தது. பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியிடம் இவர் நல்ல விமர்சனத்தையும் பெற்று வந்திருந்தார். அனைத்து கண்டஸ்டன்ஸுக்கும் இவர் ஒரு டஃப் கண்டஸ்டண்டாகவே இருந்தார்.
Bigg Boss Tamil Eviction, வியானா எலிமினேஷன்:
வியானா எப்.ஜே காதல்:
சரியான விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த வியானா சற்று தடுமாறி எப்ஜே உடனான காதலில் விழுந்தார். ஸ்கூல் டாஸ்கில் சரியாக விளையாடாத வியானா எப்ஜேயின்ன் உடனே இருந்திருந்த நிலையில் அனைத்து கண்டஸ்டன்ஸ் ஆளும் அவர் ஒஸ்ட் பிளேயர் என்ற வார்த்தையை அனைவருடமிருந்தும் பெற்றார். விஜய் சேதுபதி முதல் முறையாக அந்த வார இறுதியில் வியன்னாவை விமர்சரித்தார். அதன் பிறகு வியானா மற்றும் எஃப்ஜே காதல் குறைய ஆரம்பித்தது. மீண்டும் ஆதிரை வைல்டு கார்டு போட்டியாளராக ரீ எண்ட்ரி கொடுக்க வியானா அமைதியாகினார். எப்ஜே கூட பேசாமலே இருந்தார். எஃப்ஜே மற்றும் வியான இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்து வந்தனர். கண்ணால் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.
வியானா எலிமினேஷன்:
தற்போது வியானா பிக் பாஸ் சீசன் 9 ஐனில் இருந்து 60 நாட்களைக் கடந்து 10ஆவது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.