- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தேவசகாயத்திடம் தொக்கா மாட்டிக்கொண்ட ஜனனி... அலறவிட தயாராகும் ஆலிவர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
தேவசகாயத்திடம் தொக்கா மாட்டிக்கொண்ட ஜனனி... அலறவிட தயாராகும் ஆலிவர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் சக்தி்யும் கொடைக்கானல் சென்றுள்ள நிலையில், அவர்களை தேவசகாயம் தேடிக் கண்டுபிடித்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் வீட்டில் இருந்தால் அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொண்டிருப்பதால், அவரை நிம்மதியாக வைத்துக் கொள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் சக்தி. இருவரும் ஜோடியாக காரில் கொடைக்கானல் கிளம்பி சென்றிருக்கிறார்கள். அங்கு தான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஏனெனில் ஜனனியை வெறிகொண்டு தேடிக் கொண்டிருக்கும் ஆலிவர் தேவசகாயம் தற்போது கொடைக்கானலில் தான் இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜனனியை கண்டுபிடித்த தேவசகாயம்
ஜனனி கொடைக்கானல் வந்திருக்கும் விஷயம் ஆலிவர் தேவசகாயத்துக்கு தெரியவந்திருக்கிறது. அவர் கடைக்கு சென்று பொருள் வாங்கி வரும்போது, ஜனனி அங்கிருந்த கார் ஒன்றில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறார். இருப்பினும் அவரை டிஸ்டர்ப் பண்ணாமல் தன்னுடைய காரில் ஏறி அமர்ந்துகொள்கிறார். ஏனெனில் போலீஸ் தேவசகாயத்தை வலைவீசி தேடிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அவருடைய முகம் தெரியாது. தேவசகாயத்தின் முகம் தெரிந்த ஒரே நபர் ஜனனி தான், அவர் தன்னை பார்த்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என சைலண்டாக சென்றுவிடுகிறார்.
வசமாக சிக்கிக் கொண்ட ஜனனி
பின்னர் காரில் ஜனனியும் சக்தியும் கிளம்பிச் செல்வதை பார்த்த தேவசகாயம், அவர்களை தன்னுடைய காரில் பின் தொடர்கிறார். இருப்பினும் நூலிழையில் அவர்களை தவறவிடுகிறார் தேவசகாயம். ஜனனி எங்கு சென்றிருப்பார் என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்த தேவசகாயத்திற்கு ஒரு குட் நியூஸ் கிடைக்கிறது. அவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் ஒரு தம்பதி தங்கி இருக்கும் தகவல் தேவசகாயத்திற்கு கிடைத்ததும், அவர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள அவர் காட்டுப்பகுதி வழியாக சென்று, அந்த கெஸ்ட் ஹவுஸை நோட்டம் விடுகிறார். அப்போது தான் அந்த தம்பதி வேறு யாருமில்லை ஜனனி மற்றும் சக்தி என்பது.
ரிவெஞ்ச் எடுக்கப்போகும் ஆலிவர்
ஜனனியை பார்த்ததும் தேவசகாயத்திற்கு சந்தோஷம், அங்க சுத்தி, இங்க சுத்தி என்கிட்டயே வந்து சிக்கிட்டியே ஜனனி என வில்லத்தனமாக சிரிக்கிறார். அப்போது சக்தி, ஜனனியை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார்கள். அவர்கள் தங்களிடமே சிக்கிக் கொண்டதால் இனி தேவசகாயத்தில் ரிவெஞ்ச் எடுக்கப் போகிறார். அவர் ஜனனியை மட்டும் கடத்திச் செல்வாரா அல்லது சக்தியும் ஆலிவரிடம் சிக்கப் போகிறாரா என்பது புரியாத புதிராக உள்ளது. ஆக மொத்தத்தில் ஜனனியின் கொடைக்கானல் டூர் அவருக்கு அவரே வைத்துக் கொண்ட ஆப்பாக மாறப்போகிறது. இனி வரும் எபிசோடுகளில் என்னென்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

