- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் சக்தியும் ஜோடியாக கொடைக்கானல் கிளம்பி இருக்கும் நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் நல்லவர் போல் வேஷம் போடுவது எதற்காக என்பது அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. அவரின் ஜாமின் கேன்சல் ஆக இருப்பதால், விரைவில் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் அவசர அவசரமாக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்கும் பொறுப்பை தன்னுடைய தம்பிகளுக்கு வழங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் அண்ணனின் இந்த முடிவை அவர்கள் இருவரும் மறுத்தாலும், பின்னர் அவரின் அன்புக் கட்டளையால், பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இதையடுத்து இiன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஆதி குணசேகரனுக்கு சிக்கல்
ஆதி குணசேகரன் ஜாமின் கேன்சல் ஆவதற்கு முக்கிய காரணம் மதிவதினி தான். அவர் தான் மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து, அவரின் பழைய வழக்குகளை எல்லாம் தோண்டி எடுக்க வைத்திருக்கிறார். இதனால் மதிவதினி மீது குணசேகரன் செம கோபத்தில் இருக்க, அந்த நேரம் பார்த்து மதிவதினியே வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் ஜனனியை பார்த்து பேச வர, அங்கிருந்த ஆதி குணசேகரனிடம் சவால்விட்டுச் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி ஜனனியிடம் தனியாக சென்று பேசுகையில், இந்த கேஸை எல்லாம் நான் பாத்துக் கொள்கிறேன். நீங்க எந்தவித பதற்றமும் இன்றி இருக்குமாறு கூறுகிறார்.
டூர் கிளம்பும் சக்தி மற்றும் ஜனனி
ஜனனி, இங்கு இருந்தால் அவர் இங்கு நடந்த பிரச்சனை நினைத்து டென்ஷன் ஆவதால் அவரை கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறார் சக்தி. அவர்கள் இருவரும் ஜோடியாக காரில் கிளம்பி உள்ளனர். செல்லும் வழியில் மனைவியை விழுந்து விழுந்து கவனிக்கிறார் சக்தி. அவர் எந்தவித டயர்டும் இல்லாமல் இருக்க, காரின் இருக்கைகளை பெட் போல் அமைத்துக் கொடுத்து, அவரை செளகரியமாக அழைத்து செல்கிறார். இப்படி இருவரும் ஜோடியாக கொடைக்கானலில் சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்பிச் சென்றுள்ள நிலையில், அங்கு தான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
காத்திருக்கும் ஆபத்து
அதன்படி ஜனனி, உடல் உறுப்புகளை திருடி விற்கும் தேவசகாயம் கும்பலிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டாலும் அவரால் தேவசகாயத்தை போலீசில் சிக்க வைக்க முடியவில்லை. தனது பொழப்பில் மண்ணை அள்ளிப் போட்ட ஜனனியை பழிவாங்க வேண்டும் என்கிற முனைப்புடன் இருக்கும் தேவசகாயம், அவரை தீர்த்துக் கட்டவும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக ஜனனி மட்டும் தனியாக ஒரு பிரச்சனையில் சிக்குவார். அல்லது சக்தி மட்டும் மாட்டுவார். ஆனால் இம்முறை அவர்கள் இருவருமே ஜோடியாக சென்று ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க இருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிப்பார்கள் என்பதை பார்க்கலாம்.
ட்விஸ்ட் என்ன?
அண்மையில் இந்த சீரியலில் ஜனனியாக நடித்துள்ள பார்வதி அளித்த பேட்டியில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களமே மாறப்போகிறது. நிறைய எதிர்பாரா புதுப் புது எண்ட்ரி இருக்கப் போகிறது என்று கூறி இருந்தார். அந்த எதிர்பாரா எண்ட்ரி, மதிவதினியின் கணவர் ராணாவாக இருக்கலாம். மதிவதினியை பழிவாங்க துடிக்கும் ஆதி குணசேகரன், வில்லன் ராணா உடன் கூட்டு சேரவும் வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

