- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கலெக்டரின் எண்ட்ரியால் கதிகலங்கிப் போன குணசேகரன்... மதிவதினியின் மாஸ் சம்பவம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கலெக்டரின் எண்ட்ரியால் கதிகலங்கிப் போன குணசேகரன்... மதிவதினியின் மாஸ் சம்பவம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை பார்க்க வீட்டுக்கு வந்துள்ள மதிவதினி அங்கு ஆதி குணசேகரனை நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தனக்கு ஜாமின் கேன்சல் ஆக இருப்பதால் தன்னுடைய சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை கதிர் மற்றும் ஞானத்திடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து வீட்டில் சலசலப்பு நிலவி வருகிறது. இதனிடையே கதிர் தன்னுடைய மனைவி உடன் ஸ்கூலுக்கு சென்றதை அறிந்த ஞானம், தானும் மகளை பார்க்க பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்புகிறார். அவரை ரேணுகா தடுத்து நிறுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மதிவதினி எண்ட்ரி
ஞானம் பள்ளிக்கு செல்வதை ரேணுகா தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த நிலையில், அப்போது வீட்டின் கேட்டை திறக்கும் சத்தம் கேட்கிறது. யார் என்று சென்று பார்க்கையில் மதிவதினி வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அவரைப் பார்த்ததும் சக்தி கீழே இறங்கி வந்து வரவேற்கிறார். மாடியில் இருந்தபடியே பார்த்த ஜனனி, கீழே வருகிறேன் என சொல்ல, அவரிடம் நீங்க அங்கயே இருங்க, நான் மேல வர்றேன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே சென்றதும் அவரை வரவேற்ற விசாலாட்சி, நீங்க ஜனனிக்கு நிறைய உதவி பண்ணுனீங்கனு சொன்னா, ரொம்ப நன்றிமா என கூறுகிறார்.
ஆதி குணசேகரனுக்கு சவால்
இதன்பின்னர் மாடிக்கு சென்ற மதிவதினி, அங்கு அமர்ந்திருந்த ஆதி குணசேகரனிடம் பேசுகிறார். அப்போது உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கவீட்டு பெண்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்கம்மா ரொம்ப நன்றி என ஆதி குணசேகரன் சொல்ல, அதற்கு பதிலளிக்கும் மதிவதினி, பெண்களை முன்னேற விடாமல் தடுக்க இங்க நிறைய பேர், நிறைய வேலைகளை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் தாண்டி ஜெயிக்கணும்னா இங்க ஒருத்தருக் கொருத்தர் உதவி செஞ்சிக்கணும், அதனால் தான் ஜனனிக்கு நான் உதவி செய்தேன் என கூறிவிட்டு உள்ளே செல்கிறார் மதிவதினி.
ஜனனிக்கு ஆறுதல்
அப்போது பதற்றத்துடன் ஆதி குணசேகரன் பற்றி ஜனனி பேச, அவரை டென்ஷன் ஆகாம இருங்க என கூறுகிறார் மதிவதினி. அதற்கு பதிலளித்த ஜனனி, அவர் செய்றதெல்லாம், அராஜகம், அக்கிரமம், இவ்வளவு வன்முறைகளை பண்ணிட்டு, இப்போ எல்லோர் கூடையும் சுமூகமா பேசி, பழகி வாழ்க்கையை கடத்தணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய அநியாயம் மேம், அதுதான் மனசுல ஓடிட்டே இருக்கு என ஜனனி சொல்ல, நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். ஆதி குணசேகரனை அவ்வளவு ஈஸியா தப்பிக்க விட்டுவிட மாட்டேன் என உறுதியளிக்கிறார் மதிவதினி.
காத்திருக்கும் செம ட்விஸ்ட்
நீங்க 3 மாசம் அமைதியா இருங்க, அதுக்கப்புறம் நம்ம தைரியத்தோடு செயல்படலாம். கர்ப்பமா இருக்குறவங்க முதல் 3 மாசம் ரொம்ப கவனமா இருக்கணும். அதுக்காக நாம எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து போகணும்னு அவசியம் இல்ல. பாத்துக்கலாம் என தைரியம் கொடுக்கிறார். குணசேகரனின் கேஸ் எல்லாமே திரும்பவும் விசாரணைக்கு வரப்போவதாக சொல்லும் மதிவதினி, அதில் உங்களுக்கான நியாயம் கிடைக்கும் என்றும், அதற்கு நிச்சயம் நான் துணை நிற்பேன் எனவும் மதிவதினி கூறி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

