MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்

Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை ஆபத்தில் இருந்து காப்பாற்றி அவரிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கிறார் இராவணன்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 10 2026, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தர்ஷினியை தேடி சென்றுள்ள நிலையில், மறுபுறம் ஆதி குணசேகரன் ஆபத்தில் சிக்கி இருக்கிறார். அவர் தனியாக வாடகை டாக்ஸியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த டாக்ஸி டிரைவர் ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, டயரில் காத்து கம்மியாக இருப்பதுபோல் தெரிகிறது, நீங்க உள்ளே இருங்க நான் போய் பார்த்துட்டு வர்றேன் என சொல்லி அவரை காருக்குள்ளேயே லாக் பண்ணிவிடுகிறார். சிறிது நேரத்தில் ஆதி குணசேகரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அவர் காரின் கதவை திறக்க பார்க்கிறார். ஆனால் அது லாக் செய்யப்பட்டு உள்ளதால், அவரால் திறக்க முடியவில்லை.

Siragadikka Aasai : சிந்தாமணியின் சூழ்ச்சியால் கைதாகும் சத்யா... ரேகாவை கண்டுபிடித்தாரா மீனா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குணசேகரனை காப்பாற்றும் இராவணன்
Image Credit : youtube/suntv

குணசேகரனை காப்பாற்றும் இராவணன்

அப்போது அந்த டிரைவர் வெளியே நின்று ஜனனி மேடம் நீங்க சொன்னபடி செஞ்சிட்டேன் என போனில் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓடிவிடுகிறார். அது ஆதி குணசேகரனுக்கு கேட்டுவிடுகிறது. அவர் காரில் மயக்க மடையும் நிலைக்கு செல்ல, அந்த நேரம் பார்த்து அங்கு வரும் இராவணன், காரின் கண்ணாடியை உடைத்து, ஆதி குணசேகரனை காப்பாற்றுவதோடு, அவரை மருத்துவமனையிலும் அனுமதிக்கிறார். அங்கு ஆதி குணசேகரனுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவர் அருகிலேயே இருக்கிறார் இராவணன்.

Related Articles

Related image1
Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Related image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்‌ஷனில் இறங்கிய ஜனனி
35
ஜனனி மீது பழிபோடும் குணசேகரன்
Image Credit : youtube/suntv

ஜனனி மீது பழிபோடும் குணசேகரன்

அவர் கண்விழித்ததும் யாருப்பா நீ என கேட்க, அவர் நீங்க எங்க குடும்பத்துக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க சார் என பொய் சொல்கிறார். நீங்க தான் என் ரோல் மாடல் என்று ஓவர் பில்டப் விட, ஆதி குணசேகரனும் அதை நம்பிவிடுகிறார். பின்னர் வீட்டுக்கு கிளம்பி செல்கிறார் குணசேகரன். அங்கு சென்று ஜனனி, தன்னை கொலை செய்ய முயன்றதாக சொல்கிறார் குணசேகரன். தனக்கு காரில் நடந்த கொடுமைகளை எல்லாம் சொல்லும் அவர், ஜனனி சொல்லி தான் அந்த டிரைவர் என்னை கொல்லப் பார்த்தாள் என கொழுத்திப்போட்டுள்ளார்.

45
அறிவுக்கரசியின் தந்தை மரணம்
Image Credit : youtube/suntv

அறிவுக்கரசியின் தந்தை மரணம்

மறுபுறம் வீட்டில் இருக்கும் அறிவுக்கரசிக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் அவரின் தந்தை போஸ்டர் பெரியசாமி இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அறிவுக்கரசி, தன் தந்தை இறப்பிற்கு வருமாறு கதிரை அழைக்கிறார். ஆனால் அவருடன் செல்ல மறுக்கும் கதிர், வாழ வேண்டிய எங்க வீட்டு புள்ளய காணோம்னு அல்லாடிக்கிட்டு இருக்கோம், இழுத்துட்டு இருக்குறவன் போயிட்டான்னு எங்கள வரச் சொல்றியா, அதெல்லாம் முடியாது நீ கிளம்பு என சொல்லிவிடுகிறார் கதிர். இதையடுத்து கதிர் உடன் சண்டை போடுகிறார் அறிவுக்கரசி.

55
தர்ஷினியை நெருங்கிய ஜனனி
Image Credit : youtube/suntv

தர்ஷினியை நெருங்கிய ஜனனி

மறுபுறம் ஜனனி, அருந்ததி உடன் காட்டுப்பகுதியில் தர்ஷினியை தேடிச் செல்ல, அங்கு ஒரு கட்டிடம் இருப்பதை பார்க்கிறார். அந்த கட்டிடத்திற்குள் தான் தர்ஷினியும், சுவாமிநாதனும் அடிபட்ட நிலையில் இருக்கிறார்கள். அந்த கட்டிடத்திற்குள் ஜனனி உள்ளே எண்ட்ரி ஆவதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அங்கிருந்து ஜனனி, தர்ஷினியை காப்பாற்றினாரா? இராவணனின் அடியாட்கள் ஜனனியை என்ன செய்தார்கள்? தர்ஷினியோடு கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வருவாரா ஜனனி? என்பதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் கிடைக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சூழ்ச்சியால் கைதாகும் சத்யா... ரேகாவை கண்டுபிடித்தாரா மீனா?
Recommended image2
Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Recommended image3
Siragadikka Aasai : சத்யாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சிந்தாமணி... போலீஸில் புகார் கொடுத்த ரேகாவின் தந்தை
Related Stories
Recommended image1
Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்‌ஷனில் இறங்கிய ஜனனி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved