- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை கண்டுபிடிக்க சென்றுள்ள ஜனனிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை இராவணனின் ஆட்கள் கடத்தி வைத்துள்ள நிலையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஜனனி களத்தில் இறங்கி உள்ளார். இந்த தேடுதல் வேட்டையின்போது ஜனனிக்கு துணையாக அருந்ததியும் வந்துள்ளார். மலை கிராம பெண்ணான அருந்ததி, ஜனனியிடம் தான் ஏற்கனவே தர்ஷினியை பார்த்திருப்பதாக சொல்ல, எங்கு, எப்போ என ஜனனி கேட்கிறார். தர்ஷினி சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும் அது இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு என அருந்ததி சொன்னதை அடுத்து இருவரும் அங்கு கிளம்பி செல்கிறார்கள்.
Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு
ஹவுஸ் அரெஸ்ட்
மறுபுறம் ஆதி குணசேகரனும் தன்னுடைய பங்கிற்கு தர்ஷினியை ஆள் வைத்து தேடி வருகிறார். இதனிடையே வீட்டிற்கு வந்த வக்கீல், கேஸ் விசாரணைக்கு வரும் நாளை சொல்லி, அது வரை நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது நல்லது என கூறி உள்ளார். அதையும் மீறி வெளியே போனால் இந்த வழக்கில் நீங்கள் வெளியவே வர முடியாதபடி ஆகிவிடும் என எச்சரித்துள்ளார் வக்கீல். இதனால் வழக்கு விசாரணைக்கு வரும் வரை வீட்டுச் சிறையிலேயே இருக்கும் சூழல் ஆதி குணசேகரனுக்கு உருவாகி உள்ளது.
தர்ஷினியை மீட்பாரா ஜனனி?
அநேகமாக ஜனனி, அருந்ததி உதவியுடன் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட வாய்ப்பு உள்ளது. இராவணனின் ஆட்களிடம் இருந்து தர்ஷினியை காப்பாற்றிக் கொண்டு வரும் ஜனனி, அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து, கோர்ட்டில் வழக்கு விசாரணை வரும்போது தர்ஷினியோடு வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் ஜனனி. தர்ஷினியும் ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இருப்பதால், இந்த வழக்கில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
ஆதி குணசேகரனுக்கு சிக்கல்
அதுமட்டுமின்றி இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, சக்தி கைக்கு கிடைத்துள்ளது. அவரும் அந்த வீடியோவை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளார். இதனால் அந்த வீடியோ இந்த வழக்கு விசாரணையின் போது கேம் சேஞ்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இராவணன் கடைசி நேரத்தில் ஏதேனும் ட்விஸ்ட் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக வெளியே காரில் சென்றிருந்த ஆதி குணசேகரனை, தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருக்கிறார் இராவணன். அவர் கார் டிரைவரிடம் சொல்லி, ஆதி குணசேகரனை காரின் உள்ளே வைத்து அடைக்க சொல்ல, அவரும் அவ்வாறே செய்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். பின்னர் காருக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிப் போகிறார் ஆதி குணசேகரன். இந்த பழியும் ஜனனி மீது விழ வாய்ப்பு உள்ளது. அதை ஜனனி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

