- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்ஷனில் இறங்கிய ஜனனி
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்ஷனில் இறங்கிய ஜனனி
Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு மிகப்பெரிய ஹிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன நிலையில், அவரை ஆதி குணசேகரன் ஒரு பக்கம் வலைவீசி தேடிவர, மறுபுறம் ஜனனி, தர்ஷினியை தேடி சிறுமலை காட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு தான் தர்ஷினியின் தோழன் சுவாமிநாதன் சொந்த ஊர் சிறுமலை என்பதால், அவரைத் தேடி அங்கு சென்றுள்ளார் ஜனனி. அங்கு அருந்ததி என்கிற பெண் ஜனனியை பத்திரமாக அழைத்து சென்று தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?
ஜனனிக்காக துப்பாக்கிச்சூடு நடத்திய அருந்ததி
ஜனனி சிறுமலையில் இருக்கும் தகவல் தெரிந்து அவரை அந்த மலை கிராமத்தை விட்டு வெளியேறுமாரு சொல்லி இரு நபர்கள் வந்து பிரச்சனை பண்ணுகிறார்கள். அப்போது ஜனனியை அங்கிருந்து அனுப்ப முடியாது என அருந்ததி சொல்லிக் கொண்டிருக்க, அந்த நபர்கள் தர தரவென ஜனனியை இழுத்துச் செல்கிறார்கள். அதைப் பார்த்து கோபமடைந்த அருந்ததி உடனே துப்பாக்கியை எடுத்து, அந்த இரு நபர்களையும் சுட்டுவிடுகிறார். அவர் சுட்டதில் அந்த இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிடுகிறார்கள்.
தர்ஷினி பற்றி அருந்ததி கொடுத்த ஹிண்ட்
இதையடுத்து மறுதினம் அருந்ததியோடு சென்று அவரின் கதைகளை கேட்டு தெரிந்துகொள்கிறார் ஜனனி. அப்போது தான் தர்ஷினியை தேடி வந்திருப்பதாக சொல்லி தர்ஷினியின் புகைப்படத்தை காட்டுகிறார். அதைப்பார்த்த அருந்ததி, அந்த பொண்ணை நான் பாத்திருக்கேன் என கூறுகிறார். எப்போ என ஜனனி கேட்க, கடந்த சில தினங்களுக்கு முன் தான் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது. அந்த காரில் சில ஆண்களும், இந்த பெண்ணும் இருந்தனர் என கூறுகிறார்.
தர்ஷினியை தேடும் ஜனனி
அப்போது அந்த காரில் இருந்த பசங்களிடம் இந்த புள்ளைக்கு என்னாச்சு டா என கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அந்த பொண்ணு எங்க தங்கச்சி தான். அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க. சரி மயங்கி கிடக்குறா சீக்கிரம் கூட்டிட்டு போங்கனு சொல்லிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன் என கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஜனனி, அந்த விபத்து நடந்த இடத்துக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து தர்ஷினியை தேடி அருந்ததி உடன் கிளம்பிச் செல்கிறார் ஜனனி.
ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு?
மறுபுறம் ஈஸ்வரி வீட்டில் தர்ஷினியை நினைத்துக் கொண்டே சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்து கிடக்க, அவரை ஆதி குணசேகரன் தண்ணீர் தெளித்து எழுப்பி அவரிடம் உனக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். எனக்கு என் பொண்ணு வீட்டுக்கு வந்து சேரணும் அதுவரைக்கும் எனக்கு நிம்மதியே இல்லை. நம்ம பொண்ணு வந்திரும் என சொல்லி அவரை ஆஸ்வாசப்படுத்துகிறார் குணசேகரன். ஜனனி தனக்கு கிடைத்துள்ள ஹிண்ட் மூலம் தர்ஷினியை ஆபத்தில் இருந்து மீட்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

