MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : கர்ப்பத்தை கலைக்கச் சொல்லும் மனோஜ்... ரோகிணி போட்ட அதிரடி டீலிங்..!

Siragadikka Aasai : கர்ப்பத்தை கலைக்கச் சொல்லும் மனோஜ்... ரோகிணி போட்ட அதிரடி டீலிங்..!

Siragadikka Aasai Serial 10 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை சந்திக்கும் ரோகிணி, அவரிடம் ஒரு டீலிங் போட்டுள்ளார். அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2026, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் உண்மை கிரிஷுக்கு தெரிய வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. ரோகிணியைப் பற்றி உண்மைகளை தெரிந்துகொள்ளும் கிரிஷ், “எனக்கு தம்பி பாப்பா வரப்போகிறதா?” என்று கேட்க, ரோகிணி அதிர்ச்சியடைகிறாள். இந்த விஷயத்தை கிரிஷிடம் ரோகிணியின் அம்மாதான் கூறியிருப்பது தெரிய வருகிறது. கிரிஷுக்கு இனி எதுவும் மறைக்கப்படக்கூடாது என்பதற்காகவே உண்மையைச் சொன்னதாக அவர் கூறுகிறார்.

இதையடுத்து கிரிஷ், “என்னைப் போல இந்த குழந்தைக்கும் அப்பா இருக்க மாட்டாரா?” என்று கேட்க, ரோகிணி சமாளித்து, இரண்டு குழந்தைகளுக்கும் மனோஜ்தான் அப்பா என்று கூறுகிறாள். மேலும் மனோஜ் நல்லவர் என்று அவருக்கு ஆதரவாகவும் பேசுகிறாள்.

Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மனோஜின் அதிர்ச்சி முடிவு!
Image Credit : jiohotstar

மனோஜின் அதிர்ச்சி முடிவு!

இதற்குப் பிறகு மனோஜை சந்திக்க ரோகிணி அவனது கடைக்குச் செல்கிறாள். அங்கு கிரிஷின் நடவடிக்கைகள் குறித்து பேசும் ரோகிணி, அவனுக்கு மனோஜ்தான் பிடித்திருப்பதால் அவனுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும் என கூறுகிறாள். ஆனால் மனோஜ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறான். “அது என்னுடைய குழந்தையா? அவனுடன் நான் ஏன் நேரம் செலவிட வேண்டும்?” என்று கேட்பதுடன், அந்த குழந்தையை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் ரோகிணி, தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உண்மையை நிரூபிப்பதாக சொல்கிறாள்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Related image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!
35
ரோகிணியிடம் மனோஜ் போடும் டீல்
Image Credit : jiohotstar

ரோகிணியிடம் மனோஜ் போடும் டீல்

ஆனால் மனோஜ் அதற்கெல்லாம் பயப்படாமல், உண்மை நிரூபிக்கப்பட்டாலும் ரோகிணியை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், தான் விவாகரத்து செய்யப் போவதாகவும் எச்சரிக்கிறான். இந்நிலையில் ரோகிணியிடம் ஒரு அதிர்ச்சியான நிபந்தனையை முன்வைக்கிறான் மனோஜ். கர்ப்பத்தை கலைத்துவிட்டால் மட்டுமே கிரிஷுடன் நேரம் செலவிடுவதாக அவன் கூறுகிறான். இதனால் வேறு வழியின்றி ரோகிணி முதலில் கிரிஷுடன் நெருக்கமாக பழகி அவனை தன் பக்கம் திருப்ப வேண்டும் என முடிவு செய்கிறாள். ஆனால் அவளது மனதில் ஓடும் திட்டம் இதைவிட பெரியதாக இருக்கிறது.

45
ரோகிணியின் மனதில் உருவாகும் பயங்கர திட்டம்!
Image Credit : jiohotstar

ரோகிணியின் மனதில் உருவாகும் பயங்கர திட்டம்!

மனோஜிடம் பேசிவிட்டு சென்ற பிறகு, ரோகிணி மனதிற்குள் ஒரு பெரிய திட்டத்தை தீட்டுகிறாள். தனது இரண்டு குழந்தைகளுக்கும் மனோஜையே அப்பாவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருப்பது போல தெரிகிறது. மறுபுறம், ரோகிணி கர்ப்பத்தை கலைக்க சம்மதித்துவிட்டதாக நினைத்து மனோஜ் மகிழ்ச்சியுடன் தனது மாமியாரிடம் விஷயத்தைச் சொல்கிறான். ஆனால் ரோகிணியின் உண்மையான எண்ணம் அவனுக்குத் தெரியவில்லை.

55
வீட்டிலும் தொடரும் முத்துவின் போராட்டம்!
Image Credit : jiohotstar

வீட்டிலும் தொடரும் முத்துவின் போராட்டம்!

மறுபுறம் வீட்டின் மேல்தளத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியிலும் புதிய பிரச்சனை உருவாகிறது. சிமெண்ட் லோடு இறக்குவதற்காக மேஸ்திரி அட்வான்ஸ் கேட்கும் நிலையில், முத்து அந்த வேலையை தற்காலிகமாக நிறுத்தச் சொல்கிறான். கார்ப்பரேஷன் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்பதால், முறையான அனுமதி வந்த பிறகே கட்டுமானத்தை தொடர வேண்டும் என்று முத்து கூறுகிறான். ஆனால் மனோஜ் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், இவ்வளவு பெரிய ஊரில் கார்ப்பரேஷன் வந்து இதையெல்லாம் பார்க்குமா என்று கேலி செய்கிறான்.

ஆனால் முத்து மட்டும், எந்த விஷயமாக இருந்தாலும் சட்டப்படி, நேர்மையாகத்தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். இதற்கிடையே கனகாவின் வீட்டிற்கு செல்லும் மனோஜிடம், வழக்கம்போல கனகா தன்னுடைய பாணியில் அன்பாக பேசுகிறாள். பின்னர் இருவரும் வெளியே செல்லலாம் என கனகா அழைக்க, மனோஜ் அவரை சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்.

ரோகிணியின் திட்டம் வெற்றி பெறுமா? கிரிஷ் உண்மையை முழுமையாக தெரிந்துகொள்வானா? மனோஜ் உண்மையில் ரோகிணியை விவாகரத்து செய்வானா? முத்துவின் கட்டுமானப் பிரச்சனை என்னவாகும்? என்பதற்கு அடுத்தடுத்த எபிசோடுகளில் விடை கிடைக்க உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?
Recommended image2
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Recommended image3
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved