MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal : தர்ஷினியை மீட்க களத்தில் குதிக்கும் இராவணன்... ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ஜனனி..!

Ethirneechal : தர்ஷினியை மீட்க களத்தில் குதிக்கும் இராவணன்... ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ஜனனி..!

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை நான் கண்டுபிடிக்கிறேன் என சொல்லி களத்தில் இறங்கி இருக்கிறார் இராவணன்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 11 2026, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி இருக்கும் இடத்தை ஜனனி நெருங்கிய நிலையில், அவர் எப்படியாவது தர்ஷினியை மீட்டு விடுவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அதில் ஒரு ட்விஸ்டாக ஜனனி, தர்ஷினியை மீட்காமல் அங்கிருந்து கிளம்புகிறார். இதனால் இராவணனுக்கு அது பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஜனனி தொடர்ந்து அருந்ததி உடன் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வர, மறுபுறம் இராவணன் ஆதி குணசேகரனின் வீட்டிற்கே வந்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : விடுதலையாகும் சத்யா... ரேகாவை கடத்தும் சிந்தாமணி; முத்து எடுத்த அதிரடி முடிவு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குணசேகரன் வீட்டில் இராவணன்
Image Credit : youtube/suntv

குணசேகரன் வீட்டில் இராவணன்

மாஸ் பிஜிஎம் உடன் ஆதி குணசேகரன் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுக்கிறார் இராவணன். நெற்றியில் பட்டைபோட்டு, வெள்ளை வேட்டி சட்டை உடன் பக்தி பழமாக வந்து வாசலில் நிற்க, அவரைப் பார்த்ததும் உள்ளிருந்து ஓடோடி வந்த ஆதி குணசேகரன், உற்சாகமாக இராவணனை உள்ளே அழைத்து செல்கிறார். உள்ளே சென்றதும் அங்கிருந்தவர்களிடம் இவர் தான் தன்னை சரியான நேரத்தில் வந்து காப்பாற்றியதாகவும், இவர் மட்டும் வரலேனா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் எனவும் கூறுகிறார். பின்னர் டைனிங் டேபிளிலில் அமர்ந்து பேசுகிறார்கள்.

Related Articles

Related image1
Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Related image2
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
34
தர்ஷினியை மீட்க ரெடியாகும் இராவணன்
Image Credit : youtube/suntv

தர்ஷினியை மீட்க ரெடியாகும் இராவணன்

அப்போது அதில் அமர்ந்திருந்த விசாலாட்சி, என் மகன் உயிரை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி தம்பி என சொல்ல, அதற்கு இராவணன், சார் எனக்கு நிறைய செஞ்சிருக்காரும்மா, அது அத்தனைக்கு எப்படி கைமாறு செய்யப்போறேன்னு எனக்கு தெரியல, ஆனால் நிச்சயம் முடிச்சிருவேன் என கூறுகிறார். அப்போது சுற்றி இருந்த கதிர், ஞானம் ஆகியோர் சோகமாக இருப்பதை பார்த்த இராவணன் என்னாச்சு என கேட்க, அதற்கு கதிர், தர்ஷினி காணாமல் போன விஷயத்தை சொல்கிறார். உடனே இராவணன் உங்க வீட்டு பொண்ணை நான் கண்டுபிடிச்சு கொடுக்கிறேன் என உறுதி அளிக்கிறார்.

44
குழப்பத்தில் ஜனனி
Image Credit : youtube/suntv

குழப்பத்தில் ஜனனி

திருடன் கிட்டயே சாவியை கொடுத்த கதையாக, தற்போது தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் இராவணனிடமே அவளை மீட்டு கொடுக்குமாறு உதவி கேட்டிருக்கிறார் ஆதி குணசேகரன். அநேகமாக தர்ஷினியை மீட்டு கொண்டு வந்து, குணசேகரன் குடும்பத்தாரிடம் இராவணன் நல்ல பெயர் வாங்க முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனனியும் ஜஸ்ட் மிஸ்ஸில் தர்ஷினி இருக்கும் இடத்தை நழுவவிட்டதால், இராவணன் தான் இனி தர்ஷினியை காப்பாற்ற முடியும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.

தர்ஷினி கிடைக்காத சோகத்தில் இருக்கும் ஜனனி, அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப பதற்றமா இருக்கு என சொல்ல, அதற்கு அருந்ததி அதுக்காக நீ இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்துவிடக் கூடாது. வா நம்ம போய் தேடலாம், கண்டிப்பா தர்ஷினியை கண்டுபிடிக்கலாம் என சொல்கிறார். இதையடுத்து என்னென்ன ட்விஸ்ட் அரங்கேறப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : விடுதலையாகும் சத்யா... ரேகாவை கடத்தும் சிந்தாமணி; முத்து எடுத்த அதிரடி முடிவு
Recommended image2
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் சூழ்ச்சியால் கைதாகும் சத்யா... ரேகாவை கண்டுபிடித்தாரா மீனா?
Related Stories
Recommended image1
Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!
Recommended image2
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved