MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்

ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கொடைக்கானலில் இருக்கும் விஷயம் ஆலிவர் தேவசகாயத்துக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2026, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, சக்தி உடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருக்கும் ஆலிவர் தேவசகாயம், ஜனனியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார். ஆலிவர் அங்கு இருக்கும் விஷயம் தெரியாமல் ஜனனி, கொடைக்கானலில் உலா வர, மறுபுறம் தன்னுடைய அடையாளம் ஜனனி மற்றும் மதிவதினி என யாருக்குமே தெரியாது என்பதால் தேவசகாயமும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து ஜாலியாக சுற்றுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
ஜனனியை பார்த்த தேவசகாயம்
Image Credit : youtube/suntv

ஜனனியை பார்த்த தேவசகாயம்

சக்தி டவர் கிடைக்காததால் காரை ஒரு இடத்தில் பார்க் பண்ணிவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று டவர் கிடைக்குமா என பார்க்கிறார். அப்போது ஜனனி, காரிலேயே படுத்து தூங்குகிறார். அந்த நேரம் பார்த்து ஆலிவர் தேவசகாயமும் அந்த இடத்துக்கு வருகிறார். அவர் ஜனனியின் காரை தாண்டி தான் ஒரு கடைக்கு நடந்து செல்கிறார். போகும் போது ஜனனி காரில் இருப்பதை நோட் பண்ணாத அவர், திரும்பி வரும் போது ஜனனியை பார்த்துவிடுகிறார். ஜனனி தூங்கிக் கொண்டிருந்ததால், அவர் ஆலிவரை நோட் பண்ணவில்லை. அங்கு ஜனனி தன்னை பார்த்துவிட்டால் மீண்டும் பிரச்சனை ஆகிவிடும் என கருதி, ஆலிவர் தன்னுடைய காருக்கு சென்றுவிடுகிறார்.

Related Articles

Related image1
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Related image2
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
34
கார் சேஸிங்
Image Credit : youtube/suntv

கார் சேஸிங்

இதன்பின்னர் ஜனனியும் சக்தியும் ஜோடியாக வந்த காரை ஃபாலோ பண்ண முடிவெடுக்கும் ஆலிவர், அந்த காரை சேஸ் பண்ணி செல்கிறார். இருப்பினும் ஜஸ்ட் மிஸ்ஸில் அவர்கள் ஆலிவரிடம் இருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஜனனி சென்ற காரை மிஸ் பண்ணி இருந்தாலும் அந்த காரின் கலரை நோட் பண்ணி அதை கண்டுபிடிக்க முடிவெடுக்கிறார் தேவசகாயம். ஆலிவர் கொடைக்கானலில் தான் இருக்கிறார் என்கிற விஷயம் தெரியாத ஜனனி, தன் கணவர் சக்தி உடன் ஜாலியாக ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். விரைவில் ஆலிவர், ஜனனி கண்ணில் படவும் வாய்ப்பு உள்ளது.

44
ஜனனி - சக்தி ரொமான்ஸ்
Image Credit : youtube/suntv

ஜனனி - சக்தி ரொமான்ஸ்

இந்த கொடைக்கானல் ட்ரிப் ஜனனிக்கும் சக்திக்கும் இடையேயான காதலை இன்னும் ஆழமாக்கி உள்ளது. ரூமில் ஜனனியிடம் பேசும் சக்தி, இங்கு நம்ம நினைச்ச நேரத்துக்கு சாப்பிடுவோம், நினைச்சப்போ தூங்குவோம். நம்ம இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணுவோம். ஒருவேளை நம்ம குழந்தை அனுமதிச்சதுனா, அப்பப்போ ரொமான்ஸும் பண்ணுவோம் என கூறுகிறார். இதைக்கேட்ட ஜனனி, பயங்கரமான ஆளா இருக்கியே நீ என கிண்டல் பண்ணுகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஆலிவர் தேவசகாயம், ஜனனி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image2
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved