MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • மோடி ஒரே ஒரு போன் போட்டால் போரே நின்று விடும்..! இந்தியாவை மட்டுமே நம்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..!

மோடி ஒரே ஒரு போன் போட்டால் போரே நின்று விடும்..! இந்தியாவை மட்டுமே நம்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..!

உலக நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவின் அடுத்த நகர்வைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்தியா அமைதித் தூதுவனாக உருவெடுக்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்

3 Min read
Author : Thiraviya raj
Published : Mar 10 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
யுஏஇ யின் அதிரடித் திருப்பம்: ஏன் இந்தியா?
Image Credit : x

யுஏஇ-யின் அதிரடித் திருப்பம்: ஏன் இந்தியா?

மத்திய கிழக்கு நாடுகள் இன்று ஒரு எரிமலையின் விளிம்பில் நின்று தகித்துக் கொண்டிருக்கின்றன. ஈரான் ஒருபுறம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மறுபுறம் என வல்லரசுகள் மோதிக்கொள்ளும் இந்த அதிகாரப் போட்டியில், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும், அமைதியும் கேள்விக்குறியாகியுள்ளது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த இக்கட்டான தருணத்தில், அரபு நாடுகள் அனைத்தும் நம்பிக்கையுடன் உற்றுநோக்கும் ஒரே திசை இந்தியா.

சமீபத்தில் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா வெளியிட்ட கருத்துக்கள் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. "ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் சரிசமமாகப் பேசும் வல்லமை கொண்ட ஒரே உலகத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே" என்று அவர் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

24
வளைகுடா நாடுகளின் குமுறல்
Image Credit : ChatGPT

வளைகுடா நாடுகளின் குமுறல்

"பிரதமர் மோடி ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள தனது சகாக்களுக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும், இந்தத் தீராதப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அந்த ஒரே ஒரு அழைப்பிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது" எங்கிறார் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா

ஈரான்-இஸ்ரேல் மோதலால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் தேவையற்ற பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இது ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தின் நிலைத்தன்மையையே சிதைத்து வருகிறது.

இது குறித்து மிர்சா தனது ஆதங்கத்தைக் கொட்டுகையில், "அவர்கள் எங்கள் மண்ணில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று சீறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த ஈரானியப் போரில் நேரடியாக ஈடுபட விரும்பவில்லை என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், போர் தங்கள் வாசல் வரை வந்துவிட்டதை அவர்களால் வேடிக்கை பார்க்க முடியவில்லை.

Related Articles

Related image1
சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு
34
இந்தியாவின் 'விஸ்வரூபம்' - ஒரு ராஜதந்திரச் சதுரங்கம்
Image Credit : X

இந்தியாவின் 'விஸ்வரூபம்' - ஒரு ராஜதந்திரச் சதுரங்கம்

ஏன் அமெரிக்காவோ அல்லது மற்ற ஐரோப்பிய நாடுகளோ செய்ய முடியாததை இந்தியா செய்யும் என்று யுஏஇ நம்புகிறது? இதற்குக் காரணம் பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளில் கட்டியெழுப்பியுள்ள தனிப்பட்ட உறவுகள் மற்றும் இந்தியாவின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கை.

இந்தியா ஒருபுறம் இஸ்ரேலுடன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நெருக்கமாக உள்ளது. மறுபுறம், ஈரானுடன் சபஹார் துறைமுகம் உள்ளிட்ட நீண்டகால வர்த்தக உறவைக் கொண்டுள்ளது. வளைகுடா நாட்டுத் தலைவர்கள் மத்தியிலும், அங்குள்ள வணிகச் சமூகத்தினர் மத்தியிலும் மோடிக்கு இருக்கும் நற்பெயர் ஈடுஇணையற்றது.

ஆபிரகாம் ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலுடன் நட்புறவையும், புவியியல் ரீதியாக ஈரானுடன் அண்டை நாட்டு உறவையும் கொண்டுள்ள யுஏஇ, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருந்தாலும், அதற்கு இந்தியாவின் 'பெரியண்ணன்' போன்ற தலையீடு மற்றும் வழிகாட்டுதல் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது.

44
இந்தியாவின் நிலைப்பாடு: அமைதியா? அதிரடியா?
Image Credit : X

இந்தியாவின் நிலைப்பாடு: அமைதியா? அதிரடியா?

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும், அதே சமயம் உறுதியாகவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், தற்போதைய பதட்டங்களைக் குறைக்க பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலம் அமைதியான தீர்வை இந்தியா ஆதரிக்கிறது என்று கூறினார். இருப்பினும், இந்தியா தனது முன்னுரிமைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை. வளைகுடா நாடுகளில் வாழும் பல லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பே இந்தியாவின் முதல் கவலை.

இந்தப் போரால் இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில் பெட்ரோலிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதைச் சரிசெய்ய அமைதி திரும்புவது அவசியம்.

ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல்கள் நடந்த சில நாட்களிலேயே, பிரதமர் மோடி யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் ஆலோனை நடத்தியது, இந்தியா இந்த விவகாரத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

உலகக் குருவாக இந்தியா?

உலகப் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த ஈரான்-இஸ்ரேல் போர், இந்தியாவின் ராஜதந்திர வலிமைக்கு விடப்பட்ட ஒரு மிகப்பெரிய சவாலாகும். அரபு நாடுகளின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றுள்ள பிரதமர் மோடி, தனது 'ஒரே ஒரு அழைப்பின்' மூலம் மூன்றாவது உலகப் போர் போன்றதொரு சூழலைத் தடுப்பாரா?

நிச்சயமாக, உலக நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவின் அடுத்த நகர்வைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்தியா அமைதித் தூதுவனாக உருவெடுக்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்!

About the Author

TR
Thiraviya raj
உலகப் போர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவுக்கு செக்..! செங்கடலில் துண்டிக்கப்படும் கேபிள்..! மொத்த இணையமும் முடங்கும் அபாயம்..!
Recommended image2
Iran Oil: 'ஈரானின் எண்ணெய்யை பிடுங்குவோம்' - டிரம்பின் மிரட்டலால் உலகம் ஷாக்! என்னதான் திட்டம்?
Recommended image3
பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
Related Stories
Recommended image1
சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved