Asianet News TamilAsianet News Tamil

இன்னொரு பாதிப்பை நாடு தாங்காது; பகீர் கிளப்பும் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே நம்பர் 1 துறையாக இருந்த தமிழக சுகாதாரத்துறை திமுக ஆட்சி காலத்தில் ICU வில் இருப்பதாக முன்னாள் சுகாராத்துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

tamil nadu health department is in icu ward in dmk government says vijayabaskar
Author
First Published Dec 25, 2022, 10:06 AM IST

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா என்றால் என்ன? அதனை எப்படி தடுப்பது? மக்களை எப்படி காப்பது என்ற எந்தவித கேள்விக்கும் பதில் கிடையாது. ஆனாலும், அதனை அதிமுக அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டது. ஆனால் தற்போது கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு, கொரோனாவால் இருந்து தப்பிப்பதற்கான வழி என அனைத்தும் நம் கண்முன்னே உள்ளது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜேஇஇ தேர்வு; தமிழக மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கிய தேர்வு முகமை

தற்போது உருமாறியுள்ள கொரோனா பரிசோதனையை தமிழகத்தில் மேற்கொள்ள ஆய்வகங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த கொரோனாவை தடுக்குமா என அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுகின்றன. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இது போதாது. அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னொரு பாதிப்பை நாடு தாங்காது. ஏற்கனவே நாட்டு மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து தற்போது தான் அதில் இருந்து மீண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை சரியாக உள்வாங்கிக் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! சிகிச்சைக்காக நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதலாவது இடத்தில் இருந்த தமிழக சுகாதாரத்துறை, திமுக ஆட்சி காலத்தில் ICUவில் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தை பெயர் மாற்றி வீடு தேடி மருத்துவம் என்று விளம்பரப்படுத்துகின்றனர். தமிழக அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் அதிமுக உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் களத்தில் இறங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios