MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சாம்... வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட்டை வெளியிட்ட பிரபலம்

எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சாம்... வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட்டை வெளியிட்ட பிரபலம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 25 2022, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாரிசு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, பிரபு, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஷியாம், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

24

வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாரிசு படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினர். அந்த வகையில் வாரிசு படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்துள்ள நடிகர் ஷியாம் பேசுகையில், இப்படத்தின் மொத்த பட்ஜெட்டையும் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... ராஷ்மிகா முதல் ரம்யா பாண்டியன் வரை... சினிமா நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ

34

அந்த வகையில் வாரிசு படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் தவிர்த்து இதர செலவுகளுக்காக முதலில் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். ஆனால் இறுதியில் திட்டமிட்டதைவிட அதிகம் செலவாகிவிட்டதாக கூறிய ஷியாம், மொத்தம் 80 கோடி வரை செலவானதாக தெரிவித்தார். படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தயாரிப்பாளர் தில் ராஜு செலவு செய்ததாக ஷியாம் கூறினார்.

44

தில் ராஜு, தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருகிறார். அவர் விஜய்யின் வாரிசு படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான ஆர்.சி.15 படத்தையும் இவர் தான் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 20 வயது சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
The Raja Saab box office Day 2: ரூ.100 கோடியை தட்டித் தூக்கும் பிரபாஸ்.! பாக்ஸ் ஆபீஸை ஆட்டிப்படைக்கும் 'தி ராஜா சாப்.!
Recommended image2
Parasakthi Box Office Collection Day 1: பாக்ஸ் ஆபிஸில் 'பராசக்தி' தாண்டவம்! முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா? விஜய்யின் சாதனையை நெருங்குகிறாரா சிவா?
Recommended image3
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved