வாரிசு ஆடியோ லாஞ்சில் மறைமுகமாக தான் ஒரு அஜித் ரசிகர் என நிரூபித்த விஜய்... இதை கவனித்தீர்களா?
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அஜித் பற்றி பேசாமல் இருந்தாலும், தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் விஜய்யும், அஜித்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளன. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்பட வாரிசு படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் விஜய், அஜித்தை பற்றியும், அவரது துணிவு படத்துடனான மோதல் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதுபற்றி பேசவில்லை.
2 ஆண்டுகளுக்கு முன்னர் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது, நடிகர் விஜய் கோர்ட் சூட் அணிந்து வந்திருந்தார். அப்போது மேடையேறி பேசும்போது, நண்பர் அஜித் மாதிரி வர்லாம்னு இப்படி கோர்ட் சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார். இதன்மூலம் அஜித்தின் டிரெஸ்சிங் ஸ்டைலுக்கு தானும் ஒரு ரசிகன் என்பத நேரடியாகவே தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!
அதேபோல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அஜித் பற்றி பேசாமல் இருந்தாலும், இந்த முறையும் அஜித்தின் டிரெஸ்சிங் ஸ்டைலை பாலோ செய்து தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை மீண்டும் மறைமுகமாக நிரூபித்துள்ளார் விஜய். வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு வெள்ளை கலர் பேண்ட்டும் பச்சை கலர் சட்டையும் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார் விஜய்.
இந்த உடையை நடிகர் அஜித் துணிவு படத்தில் அணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். துணிவு படத்தில் இடம்பெறும் காசேதான் கடவுளடா பாடலில் அஜித் இதே கலர் உடையில் நடனம் ஆடி இருப்பார். தற்போது விஜய்யும் அஜித்தை போன்று அதே நிற உடை அணிந்து வாரிசு பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்ததைப் பார்த்து அஜித் ரசிகர்களே வியப்படைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... நோ அரசியல்... வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அப்படி என்ன தான் பேசினார்?