MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நோ அரசியல்... வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அப்படி என்ன தான் பேசினார்?

நோ அரசியல்... வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அப்படி என்ன தான் பேசினார்?

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, தான் யாரை போட்டியாக நினைக்கிறேன் என்பதை மனம்திறந்து பேசி உள்ளார் நடிகர் விஜய்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Dec 25 2022, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் பேசி முடித்ததை அடுத்து நடிகர் விஜய் இறுதியாக மேடை ஏறி பேசினார். அவர் பேச வந்ததும் ரசிகர்களை பார்த்து ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இறுதியாக நான் ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் கிடைத்துவிட்டதாக தெரிவித்தார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து பேசத் தொடங்கிய அவர், விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் வழங்குவது தனக்கு பெருமையாக உள்ளதாக கூறினார். ரத்தத்திற்கு தான் சாதி தெரியாது, இந்த நல்ல குணத்தை நாம் ரத்தத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம் என கூறிய அவர், ரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்புதான் தனக்கு போதை என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுடன்... விஜய் எடுத்துக்கொண்ட மாஸான செல்ஃபி வீடியோ இதோ

34

நான் 1990-ல் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக வந்தார். பின்னர் போகப்போக அவர் என்னுடைய சீரியஸ் ஆன போட்டியாளராக மாறினார். இதையடுத்து நானும் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஓடினேன். அந்த நடிகரை விட எப்படியாவது அதிக வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடினேன். நம்ம எல்லாருக்கும் அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். நீங்கள் உங்களுடன் போட்டி போடுங்கள் என்று தெரிவித்தார்.

44

தொடர்ந்து பேசிய அவர், “நம்ம போகின்ற பாதை நிறைவா இருக்கணும்னா நாம தேர்ந்தெடுக்கிற பாதை சரியா இருக்கணும். நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.” என பேசினார்.

இதையும் படியுங்கள்... ராஷ்மிகா விஜய் ரசிகையாக மாறியதற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா? ஃபிளாஸ் பேக் கதையை சொன்ன நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
The Dark Heaven Movie Review : மரணத்தை முன்கூட்டியே சொல்லும் மர்ம புத்தகம் - தி டார்க் ஹெவன் விமர்சனம்
Recommended image2
Bigg Boss Eviction : பிக் பாஸ் சீசன் 10-ல் நடந்த ஷாக்கிங் எலிமினேஷன்... இந்த வாரம் எவிக்ட் ஆனது இவரா?
Recommended image3
ஏன் நாங்க விஷ் பண்ணக் கூடாதா? தனுஷின் ஒரே ஒரு பதிவு: வெடித்துக் கிளம்பிய அரசியல் பூகம்பம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved