தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுடன்... விஜய் எடுத்துக்கொண்ட மாஸான செல்ஃபி வீடியோ இதோ

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடை ஏறி பேசத் தொடங்கும் முன் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy vijay take selfie video with audience in Varisu audio Launch

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார். 2 ஆண்டுகளுக்கு பின் அவர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா இதுவாகும்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டு விஜய்யை பற்றியும், அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொண்டனர். இதையடுத்து இறுதியாக மேடை ஏறி பேச வந்தார் விஜய். அவர் வந்ததும், ஆரவாரம் செய்த ரசிகர்களைப் பார்த்து, விஜய் ரஞ்சிதமே பாடலில் வரும் பாணியில் முத்தம் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்... விஜய் தான் சூப்பர்ஸ்டார்.. இந்த பொங்கல் நம்மலோடது! மேடையில் நம்பர்1 நம்பர்1-னு கத்தி அதகளப்படுத்திய தில் ராஜு

இதையடுத்து நெஞ்சில் குடியிருக்கும் என சொல்லி தனது பேச்சை தொடங்கிய விஜய், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, தன்னுடைய போனில் செல்ஃபி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தற்போது நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டு உள்ளது.

அந்த வீடியோவை பதிவிட்டு என் நெஞ்சில் குடியிருக்கும் என்கிற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து தான் தன்னுடையே டிரேட் மார்க் குட்டி ஸ்டோரியை சொல்லி தனது பேச்சை தொடங்க ஆரம்பித்தார் விஜய்.

இதையும் படியுங்கள்... இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ... தளபதி படத்துக்கு பாட்டு ரொம்ப முக்கியம் - தமன் பேச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios