இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ... தளபதி படத்துக்கு பாட்டு ரொம்ப முக்கியம் - தமன் பேச்சு

இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ, அதேமாதிரி தளபதி படத்துக்கு பாட்டு கம்போஸ் பண்றது ரெம்ப முக்கியம் என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தமன் பேசி உள்ளார்.

Music director Thaman Speech at Thalapathy vijay's Varisu Audio Launch

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டு விஜய்யை பற்றியும், வாரிசு படத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவின் நாயகனான தமன் இந்த விழாவில் பேசியதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அவர் பேசியதாவது : “விஜய் அண்ணா உடன் பணியாற்றுவதற்காக 27 வருடங்கள் காத்திருந்தேன். தற்போது தான் அது நடந்துள்ளது. நான் மிகப்பெரிய தளபதி வெறியன். தளபதி கூட ஒர்க் பண்ணது எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாதிரி இருந்தது. ஏன்னா அதவிட பெருசு எதுவும் கிடையாது. என்னைப்போல் என் மகனும் தளபதியின் தீவிர ரசிகன். அவன் இப்போ 10-வது படிக்கிறான். அவன் தான் எனக்கு அதிக பிரஸர் போட்டான். நீ மட்டும் விஜய்க்கு நல்லா பாட்டு போடலேனா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டான்.

இதையும் படியுங்கள்... செம்ம சிம்பிளாக... ஃபார்மல் பேன்ட் ஷர்ட்டில் மிரட்டலாக 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

Music director Thaman Speech at Thalapathy vijay's Varisu Audio Launch

இதுனாலயே வாரிசு படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. ரஞ்சிதமே பாட்டு கம்போஸ் பண்ணும்போது 3 மணிநேரம் ஆகும்னு நெனச்சேன். ஆனா 2 மணிநேரத்துக்குள்ளயே விஜய் அண்ணா பாடி முடிச்சிட்டாரு. போகும்போது கூட நீங்க ஹாப்பி தான... நீங்க ஹாப்பி தானனு கேட்டாரு. தளபதி நம்மகிட்ட கேட்குறாரானு எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு.

இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ, அதேமாதிரி தளபதி படத்துக்கு பாட்டு கம்போஸ் பண்றது ரெம்ப முக்கியம். இவ்ளோ பெரிய படத்தில் என்னுடைய நண்பர்களான சிம்பு, அனிருத் ஆகியோருடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது.

குறிப்பாக 2 நாளுக்கு முன்னாடி தான் இந்த படத்துக்காக அனிருத் ஒரு பாட்டு பாடி கொடுத்தாரு. அதேமாதிரி தான் சிம்புகிட்ட தீ தளபதி பாட்டுக்கு உங்க வாய்ஸ் கரெக்டா இருக்கும்னு சொன்னேன். உடனே விஜய் அண்ணா ரசிகனா வந்து பாடி கொடுத்துட்டு போனாரு. இன்னும் கொஞ்சம் நேரம் பேசுனா நான் அழுதிருவேன். அப்புறம் என் கண்ணுக்கு டயபர் தான் போடனும்” என பேசினார்.

இதையும் படியுங்கள்... 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு தேவதை போல் வந்த ராஷ்மிகா..! மிரட்டல் லுக்கில் வந்திறங்கிய பிரபலங்களின் போட்டோஸ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios