- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
கயல் மருமகள் மகாசங்கமத்தில் மீனாட்சியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆனந்தி மற்றும் ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kayal and Aadhirai dance performance
கயல் மற்றும் மருமகள் இணைந்து நடக்கும் மகா சங்கமம் இன்றைய எபிசோடில் மீனாட்சி யின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பிக்கிறது என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். ரோகினி காலேஜுக்கு போவதைதெரிந்து பிரபு சண்டையிடாமல் சென்றார்.ஆதிரை ரேவதி இருவரும் பிரவிடம் சென்று சமாதானப்படுத்துகின்றனர். அப்போது பிரபு பெண்களுக்கு படிப்பு முக்கியம்தான் அதனால தான் நான் படிக்க வைக்கிறேன்.
Meenakshi birthday celebration Kayal
இப்ப கூட அவள் கையை உதறிட்டு வந்தது அவ மேல இருக்குற கோவம் இல்ல ஒரு அண்ணனா அவகிட்ட உண்மையை பேச முடியல அதனால. எனக்கு யாருமேலயும் கோபம் கிடையாது ரேவதி என்று ரோகினி மீது அன்பாக தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் பிரபு. ரோகினிக்கு காலேஜ்ல போய் படிக்கணும்னு ரொம்ப ஆசை ஆனா அப்ப என்கிட்ட காசு இல்ல வசதி இல்ல அதனால நான் படிக்க வைக்கல ஆனா இப்ப வசதி இருக்கு அவளை படிக்க சொல்ற என்று சொல்கிறார் பிரபு. அவ மித்த பெண்கள் மாதிரி லவ்வு காதல் என்று சுத்தமா ஒழுங்கா படிக்கிற அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம் என்று ரோகினியை முழுமையாக நம்பும் பிரபு. உன் தங்கச்சி படிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா அதை ஏன் என்கிட்ட சொல்லல இதுதான் எனக்கு கஷ்டமாக இருக்கு. எல்லாம் கூறினார்.
ஆனந்தியை கடத்த திட்டமிடும் பாலு:
மீனாட்சியின் மகன் கௌசிக்கிற்கு ஆனந்தியை நிச்சயதார்த்த செய்ய முடிவு செய்துள்ளனர் ஆனால் பாலு ஆனந்தியை காதலிப்பதால் தன் நண்பருடன் சேர்ந்து ஆனந்தியை கடத்த திட்டமிடுகின்றனர் அதனை கண்டுபிடிக்கிறார் எழில். எழில் சென்று அவர்களை அடித்து விரட்டுகிறார்.
Kayal Marumagal Maha Sangamam
ரோகிணியை கடத்தும் கௌதம் மற்றும் சத்யா: அது ஒரு புறம் நடக்க மறுபுறம் ரோகிணியை யாருக்கும் தெரியாமல் கௌதம் அன்பு வலைகளால் வீசி கடத்தமுற்படுகிறார் அதனை கண்டுபிடிக்கிறார் கயல் மற்றும் ஆதிரை இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.