MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!

மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!

Mayilvaganam Hotel Server Work : கார்த்திகை தீபம் சீரியலில் மயில்வாகனம் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சென்றுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 19 2026, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Karthigai Deepam Today Episode Promo
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Today Episode Promo

Mayilvaganam Hotel Server Work : கார்த்திகை தீபம் சீரியலில் மயில்வாகனம் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பானது முதல் இன்று வரை மயில்வாகனம் வீட்டோடு மாப்பிள்ளையாகத்தான் இருக்கிறார். சாமுண்டீஸ்வரியின் மூத்த மகள் ரோகிணியை திருமணம் செய்த பிறகு அவர் வீட்டோட மாப்பிளையாக இருக்கிறார். இந்த நிலையில் தான் கார்த்திக்கிடம் சவால்விட்டு தோற்ற சந்திரகலா, கார்த்திக்கின் அம்மா அபிராமி நாச்சியார் சிலை இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Mayilvaganam insult in Karthigai Deepam
Image Credit : Zee Tamil You Tube

Mayilvaganam insult in Karthigai Deepam

முதல் நாளில் எப்படியோ சுத்தம் செய்துவிட்டார். இதே போன்று அடுத்த நாளும் செய்ய வேண்டும் என்பதை மயில்வாகனம் சுட்டிக் காட்டினார். அவர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து சந்திரகலாவும் அந்த வேலையை செய்துவிட்டு உடல்வலியோடு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள மற்ற அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். சந்திரகலா வருவதை பார்த்த சாமுண்டீஸ்வரி அவரை சாப்பிட அழைத்தார். ஆனால், அவரோ எனக்கு வேண்டாம் அக்கா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட சென்றார். 

36
வீட்டோட மாப்பிள்ளை அவமானம்
Image Credit : Zee Tamil You Tube

வீட்டோட மாப்பிள்ளை அவமானம்

ஆனால், அப்போது, மயில்வாகனம் அவர் இருக்கும் நிலைக்கு இப்போது ரெஸ்ட்தான் வேண்டும் என்பது போன்று பேசியுள்ளார். ஏற்கனவே உடல் வலியோடு இருந்த சந்திரகலாவிற்கு மயில்வாகனம் பேசியது கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சந்திரகலா, மயில்வாகனத்தை வீட்டோட மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்துள்ளார். மேலும், அவரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளார். சந்திரகலா பேசியதால் மனம் நொந்து போன மயில்வாகனம் தனது ரூமிற்கு சென்றார். அவருக்கு ஆறுதலாக ரோகிணி இருந்தாலும், மயில்வாகனத்தால் அதனை தாங்கி கொள்ள முடியவில்லை.

46
கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் ப்ரோமோ
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் ப்ரோமோ

இத்தனை நாட்களாக நான் சும்மாவே இருந்துவிட்டேன். இனி நமக்கும் குழந்தை பிறக்க போகிறது. அந்த குழந்தைக்காவது நான் வேலைக்கு போக வேண்டும் அல்லவா என்று பேசினார். மேலும், அடுத்த நாள் யாரிடமும் சொல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். ஆம், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்துள்ளார். மயில்வாகனம் வீட்டில் இல்லாததை பார்த்து ரோகிணி பதற்றத்துடன் அனைவரிடமும் கூறியுள்ளார்.

56
மயில்வாகனம் சர்வர் வேலை
Image Credit : Zee Tamil You Tube

மயில்வாகனம் சர்வர் வேலை

பின்னர், கார்த்திக் அவரை தேடிச் சென்ற போது ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்துள்ளார். அவரிடம் சென்று ஏன் இப்படி பண்ணுறீங்க, நான் வேண்டுமென்றால் உங்களுக்கு பிஸினஸிற்கு பணம் தரவா என்று கேட்க, அதனை அவர் மறுத்துள்ளார். நான், அத்தையிடம் சொன்னாலே அவர்கள் பிஸினஸ் செய்ய பணம் தருவார்கள். ஆனால், அதையும் கூட சின்ன அத்தை அசிங்கமாக பேசி, அவமானப்படுத்துவாங்க. அதனால், நான் என்னுடைய சொந்த காலில் முன்னேற நினைக்கிறேன்.

66
கார்த்திகை தீபம் சீரியல் மயில்வாகனம்
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் சீரியல் மயில்வாகனம்

நீ எனக்கு வெறும் சகலை மட்டுமில்லை என்னுடைய தம்பி மாதிரி என்று பேசினார். நான் தம்பி தானே, அப்போது நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லவே, மயில்வாகனம் மறுத்துள்ளார். இனி வரும் காலங்களில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : ரோகிணியின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட விஜயா... தப்பித்த மனோஜ்..!
Recommended image2
Siragadikka Aasai : ஸ்ருதி வீட்டில் வெடித்த பிரச்சனை; உடனே வெளியேறிய விஜயா... வசமாக சிக்கப்போகும் மனோஜ்
Recommended image3
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved