தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!
தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் விஜய் ரஞ்சிதமே பாடலை பாடி மேடையில் டான்ஸ் ஆடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகின் டாப் நடிகரான, விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதே நாளில் விஜய்யின் நண்பரும், தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகிறது. சுமார் 9 வருடங்களுக்கு பின்னர், இவர்கள் இருவரின் படங்களும் திருவிழா நாட்களை குறிவைத்து வெளியாவதால், இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றி மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்காக சொல்ல போகும் குட்டி கதை என்ன? அடுத்தடுத்து தளபதி, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதால், அரசியல் நோக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை வெளியிடுவாரா? என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தது.
மிகவும் அமைதியாக மேடைக்கு வந்த விஜய்... ரசிகர்களை பார்த்து, 'என்ன உருவாகுனா உங்களுக்கு நன்றி. 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் நீண்ட நாட்களாக இரத்த தானம் பற்றி பேச விரும்பினேன். அதற்கு இனம், மதம், சாதி வேறுபாடுகள் கிடையாது.. சமத்துவத்தை நாம் இரத்தத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு தான் உலகைத்தியே ஜெயிக்கும்.. என ஆக்கபூர்வமான கருத்துக்களை பேசினார்.
மேலும் மேடையில் இருந்து ரசிகர்களுக்கு ஃபிளையிங் கிஸ்ஸை பறக்க விட்ட விஜய்... பின்னர் மேடையில் இருந்தபடி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். அதே போல்... வாரிசு படத்தில் தான், பாடியுள்ள ரஞ்சிதமே பாடலை, பாடியதோடு மட்டும் இன்றி, அதற்க்கு டான்சும் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு விஜய் 1 நிமிடம் 20 நொடிகள் ஒரே டேக்கில் நடனமாடியுள்ளதாக இந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் ஜானி இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- rashmika
- rashmika mandanna
- rashmika mandanna about varisu
- str about vijay
- thalapathy vijay
- thalapathy vijay varisu
- thunivu vs varisu
- varisu
- varisu 1st single
- varisu 2nd look
- varisu audio launch
- varisu audio launch date
- varisu audio launch live
- varisu audio launch promo
- varisu audio launch update
- varisu audio launch vijay speech
- varisu dubai
- varisu first single
- varisu first song
- varisu firstlook
- varisu getup
- varisu latest updates
- varisu memes
- varisu movie
- varisu new movie
- varisu singers
- varisu song
- varisu story
- varisu teaser
- varisu trailer
- varisu troll
- varisu update
- varisu updates
- varisu vijay
- varisu vijay movie
- varisu vijay speech
- varisu villan
- varisu vs ak 61
- varisu vs thunivu
- varisu vs thunivu clash
- vijay
- vijay about thunivu
- vijay about varisu movie
- vijay varisu
- vijay varisu movie
- vijay dance