TamilNews Highlights: வால்பாறையில் தொடர்மழை.. நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

Tamil News live updates today on august 4 2022

கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக வால்பாறை பகுதியில் இடைவிடாது அடை மழை பெய்துவருகிறது. இதன்காரணமாக வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நடுமலையாறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.

11:00 PM IST

மேட்டூர் அணைக்கு 2.40 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு... சேலம் ஆட்சியர் எச்சரிக்கை!!

மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சேலம் ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும், முன் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

4:54 PM IST

5ஜி மெகா ஊழலில் வகையாக மாட்டிக் கொண்ட மோடி அரசு.. விசாரணையில் இருந்து தப்பவே முடியாது.. அழகிரி.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சிக்கியுள்ள மோடி அரசு விசாரணையில் இருந்து தப்ப முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- கடந்த வாரம் மத்திய அரசு அதிவேக செல்போன் சேவைக்காக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை பகிரங்கமாக ஏலம் விட்டது. இதில் அரசுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஏலம் நடப்பதற்கு முன்னரே ஆரூடம் கூறினார், மேலும் படிக்க

12:47 PM IST

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் உள்ள அந்த சிலை இருக்க கூடாது.. கனல் கண்ணன் பேசியதில் என்ன தவறு.. அண்ணாமலை.

அரசு மேடையில் பேசியது கருத்துச்சுதந்திரம் என்றால் கனல்கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலை உடைக்க வேண்டுமென பைட் மாஸ்டர் கனல்கண்ணன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க

12:40 PM IST

இபிஎஸ்யிடம் அதிமுக அலுவலக சாவி...! செக் வைக்கும் ஓபிஎஸ்...உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக தலைமையகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். 

மேலும் படிக்க..

12:05 PM IST

ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் வார்த்தை மோதல்...! அதிமுக நிர்வாகிகளுக்கு திடீர் கட்டளையிட்ட ஓ.பன்னீர் செல்வம்

 அரசியல் ரீதியாக நம்மம யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்து கொள்ள கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

11:56 AM IST

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. முதலமைச்சர் ஆலோசனை

தொடர் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல்வேறு மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

10:44 AM IST

தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை

கடந்த மாதம் 21 ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வவுனியா சிறையில்  உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை விடுதலை செய்ய, இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

10:13 AM IST

வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி

சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

10:07 AM IST

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 

10:06 AM IST

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது

வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது. நேற்று 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

9:53 AM IST

Varalakshmi Vratham 2022 : மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி நோம்பு...உருவான கதை

அனைத்து செல்வங்களையும் மாங்கல்ய பலத்தையும் அள்ளித் தரக்கூடிய வரலட்சுமி நோன்பு இந்து பெண்களால் கொண்டாடப்படுகிறது. 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறையில் முழு நிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிகிழமை சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வத்தோடும் இருக்க தாலி பாக்கியம் நிலைக்கவும் இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

மேலும் படிக்க

9:52 AM IST

வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள் இதோ!

வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க

9:51 AM IST

திருமகளின் அருள் கிடைக்க வரலட்சுமி விரதம் நாளில்..பூஜை அறையில் மறக்காமல் கேட்க வேண்டிய 7 சிறந்த பக்தி பாடல்கள்

Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

9:46 AM IST

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை... 9 ஆக அதிகரித்தது பாதிப்பு எண்ணிக்கை!!

டெல்லியில் 31 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆகவும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆகவும் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க

9:45 AM IST

Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

Sukran peyarchi 2022 Palangal: சுக்கிரன் கிரகம் 7 ​​ஆகஸ்ட் 2022 அன்று காலை 05:12 மணிக்கு கடக ராசிக்கு மாறுகிறது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

மேலும் படிக்க

9:27 AM IST

நியாயவிலைக்கடைகளில் அரிசிக்கு பதிலாக பணமா...? அரசுக்கு எதிராக சீறிய வேல்முருகன்

அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு, அந்தப் பணப்பட்டுவாடாவையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ள வேல்முருகன் உடனடியாக மூடிய நியாயவிலைக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

9:12 AM IST

தரையில் கிடந்த ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி..!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்க

8:39 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பை அம்மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:33 AM IST

கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்  வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

7:28 AM IST

கத்தி பேசுறது... கட்டையை காட்டி பேசுறதுயெல்லாம் விருமனுக்கு பிடிக்காது..! பொறி பறக்கும் 'விருமன்' ட்ரைலர்!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க

7:28 AM IST

வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!

கார்த்தி - அதிதி நடித்துள்ள 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடந்த நிலையில், அதன் புகைப்படங்கள் இதோ...
மேலும் படிக்க

7:26 AM IST

Avoid Food: கர்ப்பகாலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடாதீங்க...மீறினால் என்ன ஆபத்து தெரியுமா..?

Avoid Food: கர்ப்ப காலத்தில்  உணவில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, எந்தெந்த உணவுகள் உடலுக்கு நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:25 AM IST

ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இளைஞரின் தற்கொலை கடிதமே சாட்சி! கலங்கிய ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும்  அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்?  ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

7:25 AM IST

குற்றலாத்துக்கு சென்ற வேன் விபத்து.. 2 பேர் பலி.. 5 பேர் படுகாயம்

கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலத்துக்கு 18 பேர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

11:00 PM IST:

மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சேலம் ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும், முன் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

4:54 PM IST:

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சிக்கியுள்ள மோடி அரசு விசாரணையில் இருந்து தப்ப முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- கடந்த வாரம் மத்திய அரசு அதிவேக செல்போன் சேவைக்காக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை பகிரங்கமாக ஏலம் விட்டது. இதில் அரசுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஏலம் நடப்பதற்கு முன்னரே ஆரூடம் கூறினார், மேலும் படிக்க

12:47 PM IST:

அரசு மேடையில் பேசியது கருத்துச்சுதந்திரம் என்றால் கனல்கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலை உடைக்க வேண்டுமென பைட் மாஸ்டர் கனல்கண்ணன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க

12:40 PM IST:

அதிமுக தலைமையகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். 

மேலும் படிக்க..

12:05 PM IST:

 அரசியல் ரீதியாக நம்மம யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்து கொள்ள கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

12:49 PM IST:

தொடர் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல்வேறு மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

10:46 AM IST:

கடந்த மாதம் 21 ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வவுனியா சிறையில்  உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை விடுதலை செய்ய, இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

10:13 AM IST:

சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

10:07 AM IST:

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 

10:06 AM IST:

வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது. நேற்று 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

9:53 AM IST:

அனைத்து செல்வங்களையும் மாங்கல்ய பலத்தையும் அள்ளித் தரக்கூடிய வரலட்சுமி நோன்பு இந்து பெண்களால் கொண்டாடப்படுகிறது. 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறையில் முழு நிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிகிழமை சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வத்தோடும் இருக்க தாலி பாக்கியம் நிலைக்கவும் இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

மேலும் படிக்க

9:52 AM IST:

வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க

9:51 AM IST:

Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

9:46 AM IST:

டெல்லியில் 31 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆகவும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆகவும் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க

9:45 AM IST:

Sukran peyarchi 2022 Palangal: சுக்கிரன் கிரகம் 7 ​​ஆகஸ்ட் 2022 அன்று காலை 05:12 மணிக்கு கடக ராசிக்கு மாறுகிறது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

மேலும் படிக்க

9:27 AM IST:

அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு, அந்தப் பணப்பட்டுவாடாவையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ள வேல்முருகன் உடனடியாக மூடிய நியாயவிலைக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

9:12 AM IST:

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்க

8:39 AM IST:

தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பை அம்மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:33 AM IST:

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்  வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

7:28 AM IST:

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க

7:28 AM IST:

கார்த்தி - அதிதி நடித்துள்ள 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடந்த நிலையில், அதன் புகைப்படங்கள் இதோ...
மேலும் படிக்க

7:26 AM IST:

Avoid Food: கர்ப்ப காலத்தில்  உணவில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, எந்தெந்த உணவுகள் உடலுக்கு நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:25 AM IST: