Asianet News TamilAsianet News Tamil

தரையில் கிடந்த ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி..!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Kallakurichi student srimathi Death  issue.. New CCTV video release
Author
Kallakurichi, First Published Aug 4, 2022, 9:06 AM IST

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தத மாணவி கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி ஒப்படைக்கப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பாக கிடுக்குப்பிடி விசாரணையில் சிபிசிஐடி போலீசார் இறங்கியுள்ளனர். 

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

Kallakurichi student srimathi Death  issue.. New CCTV video release

இந்நிலையில், தற்போது ஸ்ரீமதி மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பள்ளி வளாகத்தில் மாணவி நடமாடும் காட்சியும், மாடிக்கு செல்லும் காட்சியும் வெளியான நிலையில், ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் பள்ளியினுடைய செயலாளர் சாந்தி காவலர் மண்ணாங்கட்டி விடுதி காப்பாளர் கிருத்திகா உட்பட 4 பேர் மாணவியின் உடலை மருத்துவமனைக்கு தூக்கி செல்லக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

Kallakurichi student srimathi Death  issue.. New CCTV video release

மாணவி தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் பிட்டு பிட்டாக வெளியாகி வருவது எப்படி? என்றும் முழு வீடியோக்களையும் போலீசார் தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும், ஸ்ரீமதியின் தாயார் செல்வி கூறுகையில்;- முதலில் 13ம் தேதி தன்னிடம் சிசிடிவி காட்சி காண்பிக்கப்பட்டதாகவும்,  அதன் பிறகு தன்னிடம் எந்த ஒரு சிசிடிவி காட்சியும் காண்பிக்கவில்லை. தனது மகள் விழுந்து இறந்து உண்மை என்றால் மொத்த சிசிடிவி காட்சியையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;-  சித்ரா மரணத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? நீதிமன்றத்தில் ஹேம்நாத் அதிர்ச்சி தகவல்.!

Follow Us:
Download App:
  • android
  • ios