MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Varalakshmi Vratham 2022 : மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி நோம்பு...உருவான கதை

Varalakshmi Vratham 2022 : மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி நோம்பு...உருவான கதை

அனைத்து செல்வங்களையும் மாங்கல்ய பலத்தையும் அள்ளித் தரக்கூடிய வரலட்சுமி நோன்பு இந்து பெண்களால் கொண்டாடப்படுகிறது. 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறையில் முழு நிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிகிழமை சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வத்தோடும் இருக்க தாலி பாக்கியம் நிலைக்கவும் இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

2 Min read
Kanmani P
Published : Aug 02 2022, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Varalakshmi Vratham 2022

Varalakshmi Vratham 2022

இந்த நோன்பு கடைபிடிக்க முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையால் இல்லத்தை நிரப்ப வேண்டும். பின்னர் வீட்டின் ஈசானிய மூளையில் மண்டபம் ஒன்றை தயார் செய்து அதில் ஒரு கலசத்தில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகள் போன்றவற்றை இட்டு கலசத்தின் மேல் தேங்காய் வைக்க வேண்டும். பின்னர் தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகத்தினால் ஆன லட்சுமி உருவச் சிலையை அந்த தேங்காயில் கட்ட வேண்டும். மஞ்சள் சிரட்டில் குங்கும் வைத்து கலசத்தில் அணிவித்து வரலட்சுமி முகம் கிழக்குப் பக்கமாக இருக்குமபடி வைத்து வணங்க வேண்டும். தீபா ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களை படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சிரட்டை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர். படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம் மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலிக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணா நோன்பு இருந்து விரதத்தை நிறைவேற்றுவர்.

மேலும் செய்திகள்...Aadi Perukku 2022 : வளங்களை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!

 மாலையில் அன்று முழுவதும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். மாலை வேலைகளில் அக்கம்பக்கம்வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

23
Varalakshmi Vratham 2022

Varalakshmi Vratham 2022

வரலட்சுமி நோன்பு உருவான கதை  :

புராணத்தின் படி ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் பெண்களுக்கு நன்மை பயக்கும் ஒரு விரதத்தைப் பற்றி கேட்டுள்ளார். சிவபெருமான் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் சாருமதியின் கதையை கூறியுள்ளார். சாருமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பக்தியில் மகிழ்ந்த லட்சுமிதேவி அவரது கனவில் தோன்றி வரலட்சுமி விரதத்தை செய்யும்படி கூறினாராம். விரதத்தில் நடைமுறைகளை அவளுக்கு விளக்கினார். பக்தியுள்ள சாருமதி தனது அண்டை வீட்டாரையும் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து லட்சுமி தேவியின் கட்டளைப்படி வரலட்சுமி பூஜையை நடத்தினார். பூஜை முடிந்ததும் பூஜை கலந்து கொண்ட மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் இருக்க லட்சுமி தேவி அருள் பாலித்தார் என்பது புராணம்.

மேலும் செய்திகளுக்கு...நாக தோஷம், ராகு-கேது தோஷம் நீங்க .. இன்று இதை செய்யுங்கள் போதும்!

33
Varalakshmi Vratham 2022

Varalakshmi Vratham 2022

அதேபோல வரலட்சுமி விரதத்துடன் தொடர்புடைய மற்றொரு பிரபலமான கதையும் உண்டு.  மன்னர் பத்ர த்ரசிரவஸ் மற்றும் ராணி சூரச்சந்திரிவின் மகள் ஷியாமபாலா அண்டை நாட்டு இளவரசரை மணந்தார். ஒருமுறை ஷியாமபாலா தனது பெற்றோரின் அரண்மனையில் இருந்தபோது அவள் தாய் ராணி சுரசந்திரிக ஒரு வயதான பெண்ணின் ஓட்டில் தங்கத்தை கண்டு விசாரிக்க அந்த வயதான பெண்மணி வரலட்சுமி பூஜை செய்ய சொன்னாள். ஆனால் ராணியோ ஒரு பிச்சைக்காரி பூஜைகள் பற்றிய அறிவுரை கூறுவதை விரும்பவில்லை. அதனால் அவளை வெளியேற்றினால் கருணை உள்ளம் கொண்ட ஷியாமபாலா மூதாட்டி எழுத்து வரலட்சுமி விரதத்தின் மகத்துவத்தை கேட்டால். அவள் தன் நாட்டிற்கு திரும்பியதும் அந்த மூதாட்டியின் கட்டளைப்படி விரதத்தை செய்தால் விரைவில் அவளது ராஜ்ஜியம் செழிக்க தொடங்கியது. மற்றும் இளவரசர் அவரது நல்லாட்சிக்காக பாராட்டப்பட்டார். ஆனால் ஷியாமபாலாவின் பெற்றோர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டது.  ராஜாவும் ராணியும் தனது செல்வத்தை இழந்தனர், மக்கள் அவர்களது ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தொடங்கினர்.  அவர்களின் துன்பத்தை பற்றி கேள்விப்பட்ட ஷியாமபாலா தங்கப்பானைகளை அனுப்பினால் ஆனால் ராணி சூரசந்திரிகா அவைகள் மீது தன் கண்களை வைத்த கணத்தில் அவை சாம்பல் ஆகின.

மேலும் செய்திகளுக்கு...Thali Peruku: ஆடிப்பெருக்கு நாளில் புதுத் தாலி ஏன் மாற்றப்படுகிறது..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ...

 இதெல்லாம் அம்மா கிழவியை அரண்மனையில் இருந்து விரட்டியதன் விளைவு என்பது உணர்ந்தால். கிழவி மாறுவேடத்தில் இருக்கும் லட்சுமிதேவி என்பதை உணர்ந்த  ஷியாம பாலா தனது தாயிடம் லட்சுமி தேவியின் மன்னிப்பு கேட்டு வரலட்சுமி விரதத்தை செய்யும் படி கேட்டுக்கொண்டால். அவள் அப்படி செய்து முற்பிறவி யை அடைய முடிந்தது.

About the Author

KP
Kanmani P
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved