Thali Peruku: ஆடிப்பெருக்கு நாளில் புதுத் தாலி ஏன் மாற்றப்படுகிறது..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ...
Thali Peruku: ஆடி பெருக்கு நாளில் பெண்கள், கோயில்கள் சென்று தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு.
Thali Peruku:
ஆடி மாதம் என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்த அம்மன் மாதமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அம்மன் அள்ளி தருகிறார். அதிலும், குறிப்பாக ஆடி பதினெட்டாம் நாள் கோவில்களுக்கு சென்று நதிக்கரைகளில் நீராடி, பெண்கள் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. அதன்படி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி புதன்கிழமை ஆடி 18ஆம் பெருக்குகாவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும்.
Thali Peruku:
புதுத் தாலி மாற்றுவது ஏன்?
ஏனெனில், ஆடி 18 அன்று மங்களத்தின் அடையாளமாக விசேஷமான நாளாக கருதப்படும் இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள், தாலி என்றழைக்கப்படும் மஞ்சள் கயிற்றை கணவர் கையால் மாற்றுகின்றனர். இந்த நாட்களில் தாலி பெருக்கி போடும் போது, நீண்ட நாட்களாக பெண்கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும் வாழ வேண்டும் என்பது ஐதீகம்.
பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு.
Thali Peruku:
திருமண பாக்கியம்..?
அதேபோன்று, திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும், தங்களுக்கு நல்ல கணவர் கணவர் கிடைக்க வேண்டும் என்று என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். அவ்வாறு செய்வதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம். புது வெள்ளம் பெருகுவதால், ஆடி பெருக்கு என முன்னோர்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Thali Peruku:
ஆடி மாதம் என்றால் என்ன..?
ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். இந்த நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இந்த நாளில், சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.